திங்கட்கிழமை, மார்ச் 1, 2021
Home அண்மை செய்திகள் இந்தியா-ஆஸி. தொடரின் போது அதிகம் பேசப்பட்ட வீரர்கள் யார் யார் தெரியுமா?

இந்தியா-ஆஸி. தொடரின் போது அதிகம் பேசப்பட்ட வீரர்கள் யார் யார் தெரியுமா?

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை இந்திய கிரிக்கெட் அணி வெற்றியுடன் நிறைவு செய்துள்ளது. இந்தத் தொடர் முழுவதும் அதிகமாக ட்ரெண்டான வீரர்கள் என்றால் அது நடராஜன் மற்றும் சிராஜ் தான்.

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை இந்திய கிரிக்கெட் அணி வெற்றியுடன் நிறைவு செய்துள்ளது. இந்தச் சுற்றுப் பயணத்தின் தொடக்கத்தில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்தது. எனினும் அதன்பின்னர் நடைபெற்ற டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களை 2-1 என்ற கணக்கில் வென்று சாதனைப் படைத்தது.

இந்நிலையில் இந்தத் தொடர் முழுவதும் அதிகமாக ட்ரெண்டான வீரர்கள் என்றால் அது நடராஜன் மற்றும் சிராஜ் தான்.


ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் முதல் முறையாக களமிறங்கிய நடராஜன் பல ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். அதன்பின்னர் அவர் டி20 தொடரிலும் கலக்கி மேலும் பிரபலமானார். இவருடைய எழுச்சிப் பயணம் பலரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இது தொடர்பாக பலரும் தங்களது கருத்துகளை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வந்தனர்.

இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் தோல்விக்கு பிறகு இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி வெற்றிப் பெற்று ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்தது. அந்தப் போட்டியில் முதல் முறையாக களமிறங்கிய முகமது சிராஜ் ரசிகர்களை மிகவும் ஈர்த்தார். ஏனென்றால், இந்தத் தொடருக்கு முன்பாக இவருடைய தந்தை மரணம் அடைந்திருந்தார். தனது தந்தையின் இறுதி சடங்கிற்கு செல்ல முடியாவிட்டாலும் அவருடைய ஆசையை இவர் நிறைவேற்றியிருந்தார். இது ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இது தொடர்பாகவும் பலரும் ட்விட்டரில் பதிவிட்டனர்.

மேலும் படிக்க: ஆஸி.-இந்தியா பிரிஸ்பேன் டெஸ்ட்: வர்ணனையில் விவாத பொருளான ‘சக்கரை பொங்கல்’

அரசியல் களத்தில் குதிக்கும் கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி!

மேற்கு வங்காளத்தின் ஹெளரா மாநிலத்தைச் சேர்ந்தவர் மனோஜ் திவாரி. இவர் 2008-ஆம் ஆண்டு இந்தியாவிற்காக விளையாட தொடங்கினார். இவரின் அதிரடியான ஆட்டத்திற்காக பல இந்தியர்களின் பாராட்டைப் பெற்றவர். ஆனால் தொடர் காயம் காரணமாக இவர் இந்திய அணியில் தொடர்ந்து இடம் பிடிக்கவில்லை. சமீபத்தில் இயற்றப்பட்ட வேளாண் சட்டத்தை எதிர்த்து பஞ்சாப் விவசாயிகள் டெல்லியில் போராடி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவாக வெளிநாட்டு பிரபலங்கள்...