திங்கட்கிழமை, மார்ச் 1, 2021
Home அண்மை செய்திகள் ஆஸி.-இந்தியா பிரிஸ்பேன் டெஸ்ட்: வர்ணனையில் விவாத பொருளான ‘சக்கரை பொங்கல்’

ஆஸி.-இந்தியா பிரிஸ்பேன் டெஸ்ட்: வர்ணனையில் விவாத பொருளான ‘சக்கரை பொங்கல்’

ஆஸ்திரேலியா-இந்தியா பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் ஹர்ஷா போக்லே வர்ணனையின் போது சக்கரை பொங்கல் குறித்து பேசியுள்ளார்.

ஆஸ்திரேலியா-இந்தியா அணிகள் இடையேயான நான்கவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸை ஆடி வரும் இந்திய அணி வாஷிங்டன் சுந்தர் மற்றும் சர்தல் தாகூர் ஆகியோரி சிறப்பான ஆட்டத்தால் தடுமாற்றத்திலிருந்து சற்று மீண்டுள்ளது. 

தாகூர்-வாஷிங்டன் சுந்தர்

7ஆவது விக்கெட்டிற்கு இந்த ஜோடி 123 ரன்கள் சேர்த்து அசத்தியது. சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். இதில் வாஷிங்டன் சுந்தர் 49 ரன்களுடன் இருந்தப் போது வர்ணனையில் ஹர்ஷா போக்லே, வார்னே உள்ளிட்டோர் இருந்தனர். அப்போது ஹர்ஷா போக்லே, “தமிழ்நாட்டைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் அரைசதம் கடந்தால் அவருடைய அம்மா சக்கரை பொங்கல் செய்வார். தற்போது சென்னையில் பொங்கல் பண்டிகை கலகட்டியுள்ளது. 

ஹர்ஷா போக்லே

1970-80களில் இந்த நேரத்தில் சென்னையில் பொங்கல் டெஸ்ட் போட்டிகள் நடத்தப்பட்டு வந்தது”எனத் தெரிவித்தார். இதற்கு வார்னே, “சக்கரை பொங்கல் என்றால் என்ன?” என்ற கேள்வியை கேட்டார். அதற்கு ஹர்ஷா போக்லே, “அது தென் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் செய்யப்படும் ஒரு வகை இனிப்பு உணவு” எனப் பதிலளித்தார். பிரிஸ்பேன் டெஸ்டில் சக்கரை பொங்கல் ஒரு விவாத பொருளாக மாறியது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க: பிரிஸ்பேனில் 2003ல் ஆஸி.யை வெளுத்து வாங்கிய கங்குலியை போல் நாளை யார் செய்வார்?

அரசியல் களத்தில் குதிக்கும் கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி!

மேற்கு வங்காளத்தின் ஹெளரா மாநிலத்தைச் சேர்ந்தவர் மனோஜ் திவாரி. இவர் 2008-ஆம் ஆண்டு இந்தியாவிற்காக விளையாட தொடங்கினார். இவரின் அதிரடியான ஆட்டத்திற்காக பல இந்தியர்களின் பாராட்டைப் பெற்றவர். ஆனால் தொடர் காயம் காரணமாக இவர் இந்திய அணியில் தொடர்ந்து இடம் பிடிக்கவில்லை. சமீபத்தில் இயற்றப்பட்ட வேளாண் சட்டத்தை எதிர்த்து பஞ்சாப் விவசாயிகள் டெல்லியில் போராடி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவாக வெளிநாட்டு பிரபலங்கள்...