செவ்வாய்க்கிழமை, ஜனவரி 19, 2021
Home அண்மை செய்திகள் ஊரடங்கிற்கு பிறகு இந்தியாவில் வெற்றிகரமாக நடைபெற்ற முதல் சர்வதேச போட்டி!

ஊரடங்கிற்கு பிறகு இந்தியாவில் வெற்றிகரமாக நடைபெற்ற முதல் சர்வதேச போட்டி!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு பிறகு நீண்ட நாட்கள் கழித்து இந்தியாவில் சர்வதேச விளையாட்டு போட்டி ஒன்று நேற்று நடைபெற்றது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் விளையாட்டு போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை. தற்போது வைரஸ் தொற்று சற்று குறைந்திருப்பதால் ஊரடங்கிலிருந்து அரசு சில விலக்கு அளித்து வருகிறது. அந்தவகையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பிறகு நீண்ட நாட்கள் கழித்து இந்தியாவில் சர்வதேச விளையாட்டு போட்டி ஒன்று நேற்று நடைபெற்றது.

16ஆவது டெல்லி பாதி மாரத்தான் போட்டிகள் நேற்று டெல்லியில் வெற்றிகரமாக நடைபெற்றது. இதனை மத்திய விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர். இதனைத் தொடக்கி வைத்தப்பின் பேட்டியளித்த மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, “இந்தியாவில் மீண்டும் விளையாட்டு போட்டிகள் தொடங்குவதற்கு டெல்லி மாரத்தான் ஒரு தொடக்கமாக அமையும். இதனை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதன் மூலம் பல சர்வதேச போட்டிகள் மீண்டும் இந்தியாவில் நடைபெறும் வாய்ப்பு அதிகமாகி உள்ளது” எனத் தெரிவித்தார். இந்த பாதி மாரத்தான் போட்டியில் உலக சாம்பியன் வீரர், வீராங்கனையும் பங்கேற்றனர்.

எத்தியோப்பியா நாட்டைச் சேர்ந்த நடப்புச் சாம்பியன் பேலிஹூ மற்றும் வேல்லிகன் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இந்தத் தொடரில் பங்கேற்றனர். அதேபோல மகளிர் பிரிவில் கோஷ்கை,யெஷன்யை உள்ளிட்ட வீராங்கனைகள் பங்கேற்றனர்.

இதில் ஆடவர் பிரிவில் இந்தியாவின் அவினாஷ் சாப்லே பாதி மாரத்தான் தூரத்தை 61 நிமிடங்களுக்கு முன்பாக கடந்து சாதனைப் படைத்தார். 61 நிமிடங்களுக்கு முன்பாக பாதி மாரத்தான் போட்டியை முடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை அவினாஷ் சாப்லே படைத்தார். அவினாஷ் சாப்லே டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் 3000 மீட்டர் ஸ்டிபிள்சேஸ் போட்டியில் பங்கேற்க உள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு முன்பாக இந்த பாதி மாரத்தான் போட்டி அவருக்கு ஒரு நல்ல பயிற்சியாக அமைந்துள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக முடங்கி இருந்த விளையாட்டு போட்டிகள் மீண்டும் தொடங்க மாரத்தான் ஒரு நல்ல வழியை காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மாரத்தான் வெற்றியை தொடர்ந்து இந்தியாவில் இயல்பாக சர்வதேச விளையாட்டு போட்டிகள் தொடங்கும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும்படிக்க: ‘நடராஜன் ஏன் ஆடவில்லை’- ட்விட்டரில் ட்ரெண்டான நடராஜன் ஹேஸ்டேக்!

‘பொங்கல் டெஸ்ட்’ – 61 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய வரலாற்று சிறப்பு நிகழ்வு!

பண்டிகை நாட்கள் அல்லது அதற்கு அருகிலுள்ள நாட்களில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றால் அதனை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பார்கள். அதுவும் கிரிக்கெட் போட்டிகள் என்றால் சொல்லவே வேண்டாம் பலர் பண்டிகை விடுமுறையில் நேரடியாக கிரிக்கெட் பார்க்க ஆசையுடன் செல்வார்கள். இவ்வாறு பண்டிகை விடுமுறைகளை குறிவைத்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் எப்போதும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவது வழக்கம்....