செவ்வாய்க்கிழமை, ஜனவரி 19, 2021
Home அண்மை செய்திகள் 'நடராஜன் ஏன் ஆடவில்லை'- ட்விட்டரில் ட்ரெண்டான நடராஜன் ஹேஸ்டேக்!

‘நடராஜன் ஏன் ஆடவில்லை’- ட்விட்டரில் ட்ரெண்டான நடராஜன் ஹேஸ்டேக்!

ட்விட்டரில் ரசிகர்கள் பலர் நடராஜனை ஏன் அணியில் எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஒருநாள்,டி20,டெஸ்ட் தொடர்களில் பங்கேற்றுள்ளது. இந்தத் தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று சிட்னியில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்தது. கடந்தப் போட்டியை போல் இந்தப் போட்டியிலும் ஆஸ்திரேலிய வீரர்கள் இந்திய பந்துவீச்சை அடித்து நொறுக்கினர்.

அதிலும் குறிப்பாக இந்திய வீரர் நவ்தீப் சாய்னியின் ஓவர்களை ஆஸ்திரேலிய வீரர்கள் பதம் பார்த்தனர். நவ்தீப் சாய்னி 7 ஓவர்கள் வீசி 70 ரன்கள் கொடுத்து ஏமாற்றம் அளித்தார். கடந்த போட்டியிலும் நவதீப் சாய்னியின் பந்துவீச்சை ஆஸ்திரேலிய வீரர்கள் எளிதில் எதிர்கொண்டனர். எனவே இந்தப் போட்டியில் இவருக்கு பதில் தமிழக வீரர் நடராஜன் களமிறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் மீண்டும் சாய்னி களமிறங்கி அதிக ரன்கள் விட்டு கொடுத்தார். இதனால் ட்விட்டரில் ரசிகர்கள் பலர் நடராஜனை ஏன் அணியில் எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் டெர்த் ஓவர்களில் நடராஜன் சிறப்பாக பந்துவீசியிருப்பார் என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஐபிஎல் 2020 தொடரில் சிறப்பாக யார்க்கர் மழை பொழிந்தவர் நடராஜன் குறிப்பிடத்தக்கது.


மேலும்படிக்க: ஆஸ்திரேலியா vs இந்தியா கிரிக்கெட் தொடர்களில் நடைபெற்ற சர்ச்சைகள்!

பிரிஸ்பேனில் 2003ல் ஆஸி.யை வெளுத்து வாங்கிய கங்குலியை போல் நாளை யார் செய்வார்?

சவுரவ் கங்குலி
ஆஸ்திரேலியா-இந்தியா அணிகள் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 369 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 62 ரன்கள் எடுத்துள்ளது. பிரிஸ்பேன் மைதானம் எப்போதும் ஆஸ்திரேலிய அணியின் கோட்டையாக இருந்துள்ளது....