TOKYO Olympics start in
:
Days
:
Hrs
:
Min
Sec
Begin typing your search above and press return to search.

அண்மை செய்திகள்

87 ஆண்டுகளாக சிறப்பான தரமான சம்பவங்களை தந்த சேப்பாக்கம் ‘ஆடுகளம்’!

87 ஆண்டுகளாக சிறப்பான தரமான சம்பவங்களை தந்த சேப்பாக்கம் ‘ஆடுகளம்’!
X
By

Ashok M

Published: 3 Feb 2021 10:59 AM GMT

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் இந்தியாவின் பழைமை வாய்ந்த மைதானங்களில் ஒன்று. இம்மைதானம் 1916ஆம் ஆண்டு கட்டப்பட்டது. மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் என்று அழைக்கப்பட்ட மைதானம் பின்னர் எம்.ஏ.சிதம்பரம் மைதானம் என்று மாற்றப்பட்டது.

1934ஆம் ஆண்டு முதல் டெஸ்ட் போட்டி சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்தை எதிர்த்து விளையாடிய இந்திய அணி தனது முதல் டெஸ்ட் வெற்றியை பெற்றது. அன்றிலிருந்து இன்று வரை சேப்பாக்கம் மைதானத்தில் 32 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளன. அவற்றில் 14 போட்டியில் இந்திய அணி வெற்றிப் பெற்றுள்ளது. இதில் 6 போட்டிகளில் தோல்வியும் 11 போட்டிகளில் டிராவும் அடைந்துள்ளன. ஒரே ஒரு போட்டி டை யாக முடிந்ததுள்ளது.

1986ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான சென்னை டெஸ்ட் போட்டி டையில் முடிந்தது. அதன்பின்னர் 1999ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்தப் போட்டிக்கு பின்னர் சென்னை ரசிகர்கள் பாகிஸ்தான் வீரர்களுக்கு அளித்த வரவேற்பை பார்த்து பாகிஸ்தான் அணியை திகைத்தது.

இந்தப் போட்டிக்கு பிறகு சென்னை சேப்பாக்கத்தின் புகழ் உலகெங்கும் பரவியது. 1999ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணி சேப்பாக்கம் மைதானத்தில் தோல்வி அடைந்ததே இல்லை. கிட்டதட்ட 22 ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் அணியின் கோட்டையாக சேப்பாக்கம் மைதானம் இருந்து வருகிறது. சிறப்பான ரசிகர்களை கொண்ட மைதானம் என்று பெயர் எடுத்த சேப்பாக்கம் மைதானம், தற்போது முதல் முறையாக ரசிகர்கள் இல்லாமல் முதல் டெஸ்ட் போட்டியை நடத்த உள்ளது. 87 ஆண்டுகால கிரிக்கெட் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவும் சேப்பாக்கம் மைதானத்திற்கு ஒரு புதிய மைல்கல்லாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: 60 ஆண்டுகளுக்கு மேலாக கைப்பந்து விளையாட்டின் தலைமையிடமாக இருக்கும் கோவை கிராமம்!

Next Story
Share it