TOKYO Olympics start in
:
Days
:
Hrs
:
Min
Sec
Begin typing your search above and press return to search.

அண்மை செய்திகள்

டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முன்னேறிய அஸ்வின்!

டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முன்னேறிய அஸ்வின்!
X
By

Ashok M

Published: 10 Feb 2021 2:49 PM GMT

இந்தியா-இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் சிறப்பாக பந்துவீசி 9 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார். இதன்காரணமாக அவர் ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியலில் சற்று முன்னேறியுள்ளார்.

அதன்படி இன்று வெளியான புதிய பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியலில் அஸ்வின் 8ஆவது இடத்திலிருந்து ஒரு இடம் முன்னேறி 7ஆவது இடத்தை பிடித்துள்ளார். அதேபோல மற்றொரு இந்திய பந்துவீச்சாளர் பும்ரா ஒரு இடம் முன்னேறி 8ஆவது இடம் பிடித்து அசத்தியுள்ளார். பந்துவீச்சில் டாப்-10 இடங்களுக்குள் அஸ்வின் மற்றும் பும்ரா இடம்பிடித்துள்ளனர்.

அதேபோல டெஸ்ட் பேட்ஸ்மென்கள் தரவரிசைப் பட்டியலில் இந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் புஜாரா ஆகிய இருவரும் பின்னடைவை சந்தித்துள்ளனர். நான்காவது இடத்திலிருந்த விராட் கோலி தற்போது ஒரு இடம் இறங்கி 5ஆவது இடத்தை பிடித்துள்ளார். அதேபோல 6ஆவது இடத்திலிருந்து புஜாரா இறங்கி 7ஆவது இடத்தை பிடித்துள்ளார். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டால் மீண்டும் தரவரிசைப் பட்டியலில் முன்னேற்றம் காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற இந்தியா என்ன செய்ய வேண்டும்?

Next Story
Share it