TOKYO Olympics start in
:
Days
:
Hrs
:
Min
Sec
Begin typing your search above and press return to search.

அண்மை செய்திகள்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற இந்தியா என்ன செய்ய வேண்டும்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற இந்தியா என்ன செய்ய வேண்டும்?
X
By

Ashok M

Published: 10 Feb 2021 2:41 AM GMT

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது. அத்துடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

இங்கிலாந்து வெற்றியை தொடர்ந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்திய அணி நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு ஏற்கெனவே நியூசிலாந்து தகுதிப் பெற்றுள்ளது. மற்றொரு இடத்திற்கு இந்தியா,இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

நியூசிலாந்து அணிக்கு எதிராக மோதும் அணியை இந்தியா-இங்கிலாந்து தொடரின் முடிவு உறுதி செய்யும். எனவே இந்தத் தொடர் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தச் சூழலில் முதல் போட்டியில் தோல்வி அடைந்துள்ள இந்திய அணி அடுத்த மூன்று போட்டிகளில் 2 வெற்றி மற்றும் ஒரு டிரா செய்தால் தகுதிப் பெற முடியும்.

அதேசமயம் அடுத்து உள்ள 3 டெஸ்ட் போட்டிகளில் ஒரு போட்டியில் இங்கிலாந்து வெற்றிப் பெற்றுவிட்டால் இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு தகுதிப் பெற முடியாது. ஆகவே இனி வரும் மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.

இந்திய அணி அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றிப் பெற்று கடைசி டெஸ்ட் போட்டியில் தோல்வி அடையும் பட்சத்தில் 2-2 என்ற கணக்கில் தொடர் சமனில் முடியும். அப்போது ஆஸ்திரேலிய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெறும்.

அதேபோல இந்திய தொடரை 3-0,3-1 அல்லது 4-0 என்ற கணக்கில் வென்றால் மட்டுமே தகுதிப் பெற முடியும். எனவே அடுத்த மூன்று போட்டிகளின் முடிவுகளும் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 13ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது.

மேலும் படிக்க: மில்கா சிங்கிற்கு பிறகு தங்கம் வென்ற இந்தியர்- மறக்கப்பட்ட ஞானசேகரின் சாதனை!

Next Story
Share it