திங்கட்கிழமை, நவம்பர் 30, 2020
Home அண்மை செய்திகள் எல்பிஎல்: இலங்கை டி20 லீக் தொடரில் பங்கேற்கும் 4  இந்திய வீரர்கள் யார் தெரியுமா?

எல்பிஎல்: இலங்கை டி20 லீக் தொடரில் பங்கேற்கும் 4  இந்திய வீரர்கள் யார் தெரியுமா?

இலங்கையில் லங்கா பிரீமியர் லீக் தொடர் நடைபெற உள்ளது. இந்தத் தொடர் ஹம்பன்தோட்டாவில் வரும் 27ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

இந்தியாவின் பிரபலமான ஐபிஎல் தொடர் போல இலங்கையில் லங்கா பிரீமியர் லீக் தொடர் நடைபெற உள்ளது. இந்தத் தொடர் ஹம்பன்தோட்டாவில் வரும் 27ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதில் கண்டி டஸ்கர்ஸ், கொழும்பு கிங்ஸ் உள்ளிட்ட 5 அணிகள் பங்கேற்க உள்ளன.

இந்நிலையில் இந்தத் தொடரில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் மூன்று பேர் களமிறங்க உள்ளனர். அவர்கள் யார்? எந்த அணிக்காக களமிறங்க உள்ளனர்?

இர்ஃபான் பதான்

இர்ஃபான் பதான்:
இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் இர்ஃபான் பதான். இவர் கண்டி டஸ்கர்ஸ் அணிக்காக களமிறங்க உள்ளார். கடைசியாக இர்ஃபான் பதான் ரோடு சேஃப்டி வெர்ல்டு சீரிஸ் தொடரில் இந்திய ஜாம்பவான்கள் அணியில் களமிறங்கினார். அந்தத் தொடரில் 31 பந்துகளில் 57 ரன்கள் அடித்து பதான் இந்திய அணியை இலங்கை அணிக்கு எதிராக வெற்றிப் பெற செய்தார். எனினும் கடந்த 8 மாதங்களாக பதான் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மன்பிரீத் கோனி

மன்பிரீத் கோனி:
சென்னை சூப்பர் கிங்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் போன்ற ஐபிஎல் அணிகள் இடம்பிடித்த வீரர் மன்பிரீத் கோனி. இவர் இந்திய அணிக்காகவும் இரண்டு போட்டிகளில் களமிறங்கியுள்ளார். இவர் 2010ஆம் ஆண்டு ஐபிஎல் வென்ற சென்னை அணியில் இடம்பிடித்திருந்தார். அதன்பின்னர் ஐபிஎல் தொடரில் இவர் பெரிதாக சொபிக்கவில்லை. தற்போது லங்கா டி20 தொடரில் கொழும்பு கிங்ஸ் அணியில் மன்பிரீத் கோனி களமிறங்க உள்ளார். இவர் 2019ஆம் ஆண்டு கனடாவில் நடைபெற்ற குளோபல் டி20 தொடரில் பங்கேற்றார்.

மன்விந்தர் பிஸ்லா

மன்விந்தர் பிஸ்லா:
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக களமிறங்கியவர் மன்விந்தர் பிஸ்லா. இவர் 2012ஆம் ஆண்டு கொல்கத்தா அணி சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக திகழ்ந்தார். அதன்பின்னர் இவர் ஐபிஎல் தொடரில் பெரிதாக சாதிக்க வில்லை. தற்போது இவர் கொழும்பு கிங்ஸ் அணியில் இடம்பிடித்துள்ளார். லங்கா டி20 தொடரில் மன்பிரீத் கோனி, டூபிளசிஸ், உடானா, மேத்யூஸ் உள்ளிட்ட வீரர்களுடன் பிஸ்லா களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

முனாஃப் பட்டேல்

முனாஃப் பட்டேல்:

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முனாஃப் பட்டேல். இவர் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடியுள்ளார். எனினும் தற்போது அவர் எந்தவித கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. இந்தச் சூழலில் தற்போது அவர் கண்டி டஸ்கர்ஸ் அணியில் சேர்ந்துள்ளார். இவர் மற்றொரு இந்திய வீரரான இர்ஃபான் பதானுடன் இணைந்து அந்த அணியில் களமிறங்க உள்ளார்.

மேலும் படிக்க: ஐபிஎல் 2020 தொடரில் ரசிகர்களால் அதிகமாக ட்வீட் செய்யப்பட்ட அணி சென்னை சூப்பர் கிங்ஸ்!

எல்பிஎல் டி20 தொடரில் அணிகளுக்கு சல்மான் கான் குடும்பம், கேரள தொழிலதிபர் உரிமையாளர்கள்!

இலங்கை டி20 தொடரான லங்கா பிரீமியர் லீக் தொடர் நேற்று முதல் தொடங்கி வரும் டிசம்பர் 16ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் கண்டி டஸ்கர்ஸ், கொழும்பு கிங்ஸ், ஜாஃப்னா ஸ்டாலியன்ஸ், டம்புள்ளா வைகிங், காலி கிளாடியேட்டர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்நிலையில் இதில் இரண்டு அணிகளை இந்தியாவைச் சேர்ந்தவர்கள் உரிமையாளர்களாக உள்ளனர். கண்டி டஸ்கர்ஸ் அணியின் உரிமையாளராக பாலிவுட்...