‘டி20 கிரிக்கெட் ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட வேண்டும்’- முன்னாள் வீரர் ராகுல் திராவிட்

Update: 2020-11-14 04:42 GMT

ஐபிஎல், சிபிஎல், பிக்பாஷ் போன்ற பல டி20 தொடர்கள் உலகளவில் மிகவும் பிரபலமாக உள்ளன. இதனால் டி20 கிரிக்கெட் நிறையே நாடுகளில் கிரிக்கெட்டை கொண்டு சேர்த்துள்ளது. எனவே கிரிக்கெட் விளையாட்டு குறிப்பாக டி20 போட்டிகளை ஒலிம்பிக்கில் சேர்க்க வேண்டும் என்று பலரும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராகுல் திராவிட் ஒரு ஐபிஎல் தொடர்பான புத்தக வெளியிட்டில் பங்கேற்றுள்ளார். அதில் இதுதொடர்பாக கருத்தை அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, “டி20 கிரிக்கெட் கிட்டதட்ட 75 நாடுகளில் தற்போது பிரபலமாகி உள்ளது. இதனால் கிரிக்கெட் விளையாட்டு அங்கு வளர்ந்துள்ளது. எனவே டி20 கிரிக்கெட் போட்டிகளை ஒலிம்பிக்கி சேர்த்தால் மிகவும் நன்றாக இருக்கும். கிரிக்கெட்டை ஒலிம்பிக்கில் சேர்க்கும் போது சில சிக்கல்கள் வரும். எனினும் சரியாக திட்டமிட்டு அதற்கு ஏற்ற வசதிகளை செய்தால் கிரிக்கெட் ஒலிம்பிக் போட்டிகளில் இடம்பெறலாம். டி20 போட்டிகள் வளர வேண்டும் என்பதே எனது விருப்பம். இதனை பிரபலபடுத்துவதன் மூலம் பல நாடுகள் கிரிக்கெட் விளையாட்டை விளையாட ஆரம்பிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

ஐசிசியும் கிரிக்கெட் விளையாட்டை ஒலிம்பிக் போட்டிகளில் சேர்க்க வேண்டும் என்று முனைப்பு காட்டி வருகிறது. இந்த நேரத்தில் ராகுல் திராவிட்டின் கருத்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க: ஐபிஎல் 2020 தொடரின் போது ட்ரெண்டான சிஎஸ்கே ட்வீட்ஸ்!