ஐபிஎல்: இறுதி ஓவரில் தோனியின் அதிரடியை கட்டுப்படுத்திய இளைஞர் அப்துல் சமாத் - காஷ்மீரின் நம்பிக்கை நட்சத்திரம்

Update: 2020-10-03 05:06 GMT

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 13ஆவது சீசனில் ஒவ்வொரு போட்டியிலும் ஒரு இளம் வீரர் சிறப்பாக விளையாடுவது வாடிக்கையாகிவிட்டது. நேற்று நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்களுக்கு இடையே போட்டியில் ஜொலித்த வீரர் ஜம்மு காஷ்மீரினை சேர்ந்த 18 வயதே ஆன அப்துல் சமாத் ஆவார்.

கடந்த ரஞ்சி சீசனில் அறிமுகமான இவர் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். ஜம்மு அணிக்காக இவர் அடித்த 36 சிக்ஸ்ர்கள் தான் கடந்த சீசனின் சாதனை ஆகும். இதனால் ஐபிஎல் ஆக்ஷ்னில் இவர் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கேற்றாற்போல் எஸ்ஆர்ஹச் அணி இவரை தேர்வு செய்தது. ஐபிஎல் வரலாற்றில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிப்பதில் எஸ்ஆர்ஹச் அணி முதன்மையானது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் அப்துல் சமாதுக்கும் விரைவில் அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. கடந்த போட்டியில் அறிமுகமான இவர் தனது பெரிய ஷாட் அடிக்கும் திறமையை வெளிப்படுத்தினார். ஆனால் நேற்று சிஎஸ்கே போன்ற பலம் வாய்ந்த அணிக்கு எதிராக தனது மற்றொரு திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்தது.

காயம் காரணமாக புவனேஸ்வர் குமார் பந்துவீச இயலாத நிலையில் மிகவும் முக்கியமானது ஆட்டத்தின் கடைசி ஒவரினை வீச அழைத்தார் அணியின் கேப்டன் டேவிட் வார்னர். எதிர்முனையில் விளையாடியதோ சென்னையின் கேப்டனும் சேஷிங்கில் தலைசிறந்தவருமான எம்எஸ் தோனி. எந்த ஒரு வீரருக்கும் நடக்கும் வரும் இந்த சமயத்தில் அனைத்தையும் மீறி சிறப்பாக பந்துவீசி தனது அணிக்கு வெற்றியைப் பெற்ற தந்தார் சமாத்.

ஜம்மு காஷ்மீரின் ஒரு சிறிய கிராமத்தில் இருந்து வந்த ஒரு வீரர் இதேபோல் சிறப்பாக விளையாடுவது அனைவருக்கும் மகிழ்ச்சி அளிப்பதாகும். சமாத் சிறப்பாக விளையாடி வருவது குறித்து அவரது நண்பர்கள் மிகவும் சிறப்பாக பேசியுள்ளனர். மேலும் சமீபகாலமாக ஜம்முவில் நடந்த வரும் விஷயங்கள் வருத்தமளிப்பதாகவே இருப்பதால் இதுபோன்ற விளையாட்டு நிகழ்வுகள் இளைஞர்களுக்கு பெரும் புத்துணர்ச்சியாக இருக்கும். பலரும் தங்களது அனைத்து உழைப்புகளையும் ஒருங்கிணைத்து விளையாட்டு போட்டிகளில் ஈடுபடுவார்கள். அப்துல் சமாதும் இதேபோல் தொடர்ந்து சிறப்பாக விளையாடி மேலும் பல இளம் காஷ்மீர் வீரர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வாழ்த்துவோம்.

மேலும் படிக்க: ‘வெள்ளைநிற மனிதரை காதலிப்பதால் இந்திய பாரம்பரியத்திற்கு கலங்கம் வராது’- பதிலடி கொடுத்த மேக்ஸ்வெலின் காதலி ராமன்