TOKYO Olympics start in
:
Days
:
Hrs
:
Min
Sec
Begin typing your search above and press return to search.

அண்மை செய்திகள்

'வெள்ளைநிற மனிதரை காதலிப்பதால் இந்திய பாரம்பரியத்திற்கு கலங்கம் வராது'- பதிலடி கொடுத்த மேக்ஸ்வெலின் காதலி ராமன்

வெள்ளைநிற மனிதரை காதலிப்பதால் இந்திய பாரம்பரியத்திற்கு கலங்கம் வராது- பதிலடி கொடுத்த மேக்ஸ்வெலின் காதலி ராமன்
X
By

Ajanth Selvaraj

Published: 1 Oct 2020 12:46 PM GMT

சமீபகாலமாக சமூக வலைத்தளங்களின் உபயோகம் பல மடங்கு அதிகரித்துள்ளது. அனைவருக்கும் ஸ்மார்ட்போன் மற்றும் இன்டெர்நெட் வசதிகள் எளிதாக கிடைப்பதே இதற்கு காரணமாகும். இதன் மூலம் பல பல நன்மைகள் கிடைத்தாலும் அவ்வப்போது சில அசௌகரியமான விஷயங்களும் நடக்கத்தான் செய்கிறது. அதுபோன்ற ஒரு நிகழ்வு தான் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளன் மேக்ஸ்வெல்லிற்கும் நடந்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் யாரும் எதிர்பாராத விதமாக மன உளைச்சல் காரணமாக கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தற்காலிகமாக ஒய்வு எடுப்பதாக அதிரடியாக அறிவித்தார். தக்க ஓய்வுக்கு பின்னர் தற்போது மீண்டும் விளையாட துவங்கியுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் இவருக்கும் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த வினி ராமன் என்பவருக்கும் நிச்சயம் நடந்தது. இது குறித்து எதிர்பார்த்தது போலவே சமூக வலைத்தளங்களில் கலவையான கருத்துக்கள் வந்தன, ஆனால் அவர்கள் இருவரும் அதைப்பற்றி பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேக்ஸ்வெல்லுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார் வினி ராமன். அந்த புகைப்படத்தில் ஒரு நபர் மிகத் தாழ்மையான கருத்துக்களை பதிவிட்டிருந்தார். இதுகுறித்து மிகவும் கோபமடைந்த வினி அந்த நபருக்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக தனது கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.

அதில், "உங்களை போல் நான் நிறம், இனம், நாடு ஆகியவற்றை பார்த்து காதலிப்பதில்லை. இவை அனைத்திற்கும் அப்பாற்ப்பட்டு காதலிப்பது எனது உரிமை. உங்களை மாதிரி யாரோ ஒரு முகம் தெரியாத நபரின் கருத்துகளை கேட்டு நான் முடிவு எடுக்க தேவையில்லை. என்னுடைய வாழ்க்கையில் நான் எடுக்கும் முடிவுகளை யாரிடமும் நிரூபிக்க வேண்டிய சூழல் எனக்கு இல்லை. மேலும் நான் ஒரு வெள்ளைநிற மனிதரை காதலிப்பதால் இந்தியரல்ல என்ற பொருளாகாது. ஆகவே உங்களுக்கு ஒரு விஷயம் பிடிக்கவில்லை என்றால் அதனைக் கடந்து செல்லுங்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.

ஒருவருடைய முடிவுகள், விருப்பங்கள் அனைத்தும் அவருக்கு சொந்தமானது எனவும் அது குறித்து கருத்து சொல்ல எவருக்கும் உரிமையில்லை எனவும் கூறியுள்ளார். இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு தனது வருங்கால மனைவியை மேக்ஸ்வெல் வெகுவாக பாராட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: ஓய்விற்கு பிறகு வெப் சீரிஸ் தயாரிப்பில் இறங்கிய தோனி

Next Story
Share it