ஐபிஎல்: மதிக்கதக்க வீரர் தோனி, சர்ச்சைக்குரிய வீரர் ஹர்திக்- ஆய்வு தகவல்

Update: 2020-10-30 06:44 GMT

ஐபிஎல் தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. பிளே ஆஃப் சுற்றுகளுக்கு அணிகள் தகுதிப் பெற தொடங்கியுள்ளன. சென்னை அணி நேற்று பெற்ற வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

இந்நிலையில் ஐபிஎல் தொடர் ஒருபுறம் இருக்க இந்தியன் இன்ஷ்டிடியூட் ஆஃப் ஹூமன் பிராண்ட் என்ற அமைப்பின் ஆய்வு முடிவுகள் தற்போது வந்துள்ளன. அதில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி மிகவும் மதிக்க விளையாட்டு வீரர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார். இந்தப் பட்டியலில் தோனி முதலிடம் பிடித்தார். அத்துடன் டவுன் டு எர்த் மனிதர் மற்றும் இன்னோவேடிவ் மனிதர் என்ற பட்டியல்களிலும் தோனி முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.

அதேபோல மற்றொரு இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா மிகவும் சர்ச்சைக்குரிய பிரபலம் என்ற பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். அதே பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும் இடம்பிடித்துள்ளார். மேலும் இந்த ஆய்வில் மிகவும் ஸ்டைலிஷ் வீரராக விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார்.

இந்த ஆய்வுகளில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை சேர்ந்த மித்தாலி ராஜ்,ஹர்மன்பிரீத் கவுர், ஷாபாலி வெர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் படிக்க: ஐபிஎல் 2020 தொடரில் கலக்கும் டாப் 5 இந்திய பேட்ஸ்மென்கள் யார் யார்?