ஐபிஎல்: ”ஆட்டநாயகன் விருதை வென்ற நான்…”- மனம்திறந்த அஸ்வின்

Update: 2020-10-10 05:49 GMT

ஐபிஎல் தொடர் தற்போது யுஏஇயில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் டெல்லி கேப்டல்ஸ் அணி வெற்றிப் பெற்றது. இப்போட்டியில் சிறப்பாக விளையாட ரவிச்சந்தரன் அஸ்வின் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

இந்நிலையில் ஆட்டநாயகன் விருதைப் பெற்றவுடன் தான் என்ன செய்வேன் சமீபத்தில் ‘ஃபிலிம்கம்பெனியன்’ தளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் அஸ்வின் மனம்திறந்துள்ளார். அதில், “நான் எல்லோரும் நினைப்பதை போல் திமிர்பிடித்தவனல்ல. எல்லோரும் களத்தில் சிரீயஸாக இருப்பதை பார்த்து தவறாக நினைத்து கொண்டனர். இந்த பொதுமுடக்க காலத்தில் என்னுடைய உண்மையான முகம் என்பதை ரசிகர்களுக்கு காட்டவே நான் யூடியுப் செனல் மற்றும் இன்ஸ்டாகிராம் லைவ் போன்றவற்றை செய்தேன்.

நான் எப்போதுமே ஒரு நகைச்சுவை விரும்பும் மனிதன். நான் கிரிக்கெட் போட்டியில் ஆட்டநாயகன் விருதை பெற்று வந்தவுடன் முதலில் ஒரு தோசை அல்லது தயிர் சாதம் சாப்பிடுவேன். அதன்பின்னர் என்னுடைய மடிகணினியில் மைக்கேல் மதனகமாராஜன் படத்தை பார்ப்பேன். அதனைத் தொடர்ந்து என்னுடைய நண்பர்களுடன் ஸ்கைப் காலில் தெருவில் விளையாடிய கிரிக்கெட் குறித்து நகைச்சுவையாக விவாதிப்பேன். என்னுடன் நெருங்கி பழகுபவர்களுக்கு நான் யார் என்று தெரியும். அதனை மற்றவர்களுக்கு காட்டவே இந்த முயற்சி” எனத் தெரிவித்துள்ளார்.

அஸ்வின் கிரிக்கெட் மைதானத்தில் பந்துவீசும் போது சற்று சிரீயஸாக இருப்பார். இதனால் அவர் நிஜ வாழ்க்கையிலும் அப்படி தான் என்று நினைப்பவர்களுக்கு அஸ்வின் இந்த நேர்காணல் ஒரு நல்ல பதிலடியாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: விஜய் சேதுபதியின் ‘800’ முத்தையா முரளிதரன் பயோபிக் படப்பிடிப்பு 2021ல் தொடக்கம்