புதன்கிழமை, அக்டோபர் 28, 2020
Home அண்மை செய்திகள் விஜய் சேதுபதியின் ‘800’ முத்தையா முரளிதரன் பயோபிக் படப்பிடிப்பு 2021ல் தொடக்கம்

விஜய் சேதுபதியின் ‘800’ முத்தையா முரளிதரன் பயோபிக் படப்பிடிப்பு 2021ல் தொடக்கம்

நேற்று நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தப் படம் தொடர்பான அப்டேட் விரைவில் வரும் எனப் பதிவிட்டிருந்தார்.

கிரிக்கெட் உலகில் சுழற்பந்து ஜாம்பவான் என்று அழைக்கப்படுபவர் இலங்கையின் முத்தையா முரளிதரன். இவர் ஒரு இலங்கை தமிழர். இவர் 1992 ஆண்டு முதல் கிரிக்கெட் பயணத்தை ஆரம்பித்தார். 2012ஆம் ஆண்டு இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தனது 800ஆவது விக்கெட்டை வீழ்த்தி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.

இந்நிலையில் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு ‘800’ என்ற தலைப்பில் படமாக்கபட உள்ளது. இதனை ஶ்ரீபதி ரெங்கசாமி இயக்குகிறார். இதில் விஜய் சேதுபதி கதாநாயகனாகவும், ரஜிதா விஜயன் கதாநாயகியாகவும் நடிக்க உள்ளனர். இப்படத்தை டிஏஆர் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் மற்றும் டிரெயின் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்க உள்ளது.

இந்தப் படத்தில் முதற்கட்டமாக போஸ்டர் மட்டும் ஃபேர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி தற்போது மற்றோரு படத்தில் நடித்து வருவதால் ‘800’ படத்தின் படப்பிடிப்பு வரும் 2021 பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் தொடங்கும் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

முன்னதாக நேற்று நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தப் படம் தொடர்பான அப்டேட் விரைவில் வரும் எனப் பதிவிட்டிருந்தார். மேலும் சில நாட்களுக்கு முன்பு ஒரு நேர்காணலின் போது விஜய் சேதுபதி, “நான் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க உள்ளேன். எனக்கு கிரிக்கெட் தெரியாது. நான் சிறுவயது முதல் கிரிக்கெட் பார்த்தது இல்லை. இதனை நான் முத்தையா முரளிதரனிடமே கூறியிருக்கிறேன்.” எனத் தெரிவித்திருந்தார்.

மேலும் படிக்க: டெல்லி தாபா தாத்தா பாட்டிக்கு கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலர் உதவி – நெகிழ்ந்த தம்பதி

ஐபிஎல்: ஒரே போட்டியில் 2 மெய்டன் வீசி அசத்திய ஆட்டோ ஓட்டுநரின் மகன் சிராஜ்!

நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முகமது சிராஜின் சிறப்பான பந்துவீச்சால் பெங்களூரு அணி வெற்றிப் பெற்றது. இந்தப் போட்டியில் தொடர்ச்சியாக இரண்டு மெய்டன் ஓவர்களை வீசி சிராஜ் சாதனைப் படைத்தார். இந்நிலையில் யார் இந்த சிராஜ்? அவர் கடந்த வந்த பாதை என்ன? ஹைதராபாத் பகுதியைச்...