ஐபிஎல்: ராஜஸ்தான் போட்டியின் போது ஆரோன் பிஞ்ச் இ-சிகிரெட் பிடித்ததை ட்விட்டரில் சாடிய ரசிகர்கள்- வீடியோ!

Update: 2020-10-18 05:09 GMT

ஐபிஎல் தொடரில் நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்தப் போட்டியில் பெங்களூரு அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இந்தப் போட்டியில் பெங்களூரு அணியின் பேட்டிங்கின் 19ஆவது ஓவரில் ஆரோன் பிஞ்சு இ-சிகிரெட் பிடிக்கும் காட்சி தொலைக்காட்சியில் வந்தது.

இதனை ரசிகர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில், “ஒரு கிரிக்கெட் போட்டியின் போது அணியின் வீரராக இருந்து கொண்டு இ-சிகிரெட் பிடிக்கலாமா?” என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

இந்த ட்வீட் தொடர்பாக பலரும் தங்களின் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக ஒருவர், “ஐபிஎல் விதிகளின்படி ஒருவர் வீரர்கள் அறையில் புகைப்பிடிக்கலாமா? இதற்கு ஆர்சிபி மற்றும் விராட் கோலி என்ன பதிலளிக்க போகிறார்கள்?” என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

மற்றொரு ரசிகர், “பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியை டேக் செய்து 19ஆவது ஓவரின் போது பிஞ்ச் புகைப்பிடிக்கிறார். இந்த வீடியோவை பாருங்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க: ‘அஸ்வின் மண்காட் டூ நடுவரின் வைடு முடிவு வரை’- டாப் 10 சர்ச்சைகள்!