TOKYO Olympics start in
:
Days
:
Hrs
:
Min
Sec
Begin typing your search above and press return to search.

அண்மை செய்திகள்

ஐபிஎல்: 'அஸ்வின் மண்காட் டூ நடுவரின் வைடு முடிவு வரை'- டாப் 10 சர்ச்சைகள்!

ஐபிஎல்: அஸ்வின் மண்காட் டூ நடுவரின் வைடு முடிவு வரை- டாப் 10 சர்ச்சைகள்!
X
By

Ashok M

Published: 15 Oct 2020 6:48 AM GMT

ஐபிஎல் 2020 போட்டிகள் மிகுந்த பரப்பரப்பான சூழலை எட்டியுள்ளது. அனைத்து அணிகளும் தலா 7 போட்டிகளை விளையாடி முதல் பாதியை முடித்துள்ளனர். இந்நிலையில் இதுவரை இந்த ஐபிஎல் களம் கண்ட சர்ச்சைகள் என்னென்ன?

சுரேஷ் ரெய்னா பால்கனி சர்ச்சை:

2020ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பே சுரேஷ் ரெய்னா தொடரிலிருந்து சொந்த காரணங்களுக்காக விலகினார். அப்போது அவருக்கு கொடுக்கப்பட்ட அறையில் பால்கனி இல்லாததால் வெளியேறினார் என்று பல கட்டு கதைகள் அவிழ்த்து விடப் பட்டன. இதனால் ஐபிஎல் தொடருக்கு முன்பே சர்ச்சைகள் வர தொடங்கின.

ஷார்ட் ரன்:

நடப்பு தொடரின் இரண்டாவது போட்டியிலேயே கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு ஒன் ஷார்ட் விதிமுறைப்படி ஒரு ரன் குறைக்கப்பட்டது. எனினும் ரீப்ளேவில் பஞ்சாப் வீரர் சரியாக ரன் ஓடியது தெரியவந்தது. ஆனால் இந்த முடிவு மாற்றப்படவில்லை. இப்போட்டியை டை செய்து பஞ்சாப் அணி சூப்பர் ஓவரில் தோல்வி டெல்லியிடம் தோல்வி அடைந்தது.

3ஆவது நடுவரின் முடிவிற்கு எதிராக டிஆர்எஸ் அப்பிள்:

இரண்டாவது முறையாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சர்ச்சைக்குள் சிக்கியது. இம்முறை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் வீரர் முஜிப் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்தார். இதில் விக்கெட் கீப்பர் பந்தை சரியாக பிடித்தாரா என்பதை மூன்றாவது நடுவர் முடிவு செய்தார். இந்த முடிவை எதிர்த்து மீண்டும் பந்து பேட்டில் படவில்லை என்று முஜிப் டிஆர்எஸ் கேட்டார். இது பெரும் சர்ச்சையானது.

சுனில் கவாஸ்கர் vs அனுஷ்கா சர்மா

ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் விராட் கோலி ஐபிஎல் தொடரின் தொடக்கத்தில் ஃபார்மில் இல்லாமல் இருந்தார். இதுகுறித்து வர்ணனையின் போது முன்னாள் வீரர் கவாஸ்கர் கருத்து தெரிவித்தார். அதில் அவர் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா குறித்து பேசினார். அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

டாம் கரண் டிஆர்எஸ்:

சென்னை சூப்பர் கிங்ஸ் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாம் கரண் விக்கெட்டை பறிகொடுத்தார். அப்போது நடுவரின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்தப் போது நடுவர் அதனை டிஆர் எஸ் முறைக்கு அனுப்பினார். ஆனால் ஏற்கெனவே ராஜஸ்தான் அப்போட்டியில் டிஆர் எஸ் முறையை பயன்படுத்திருந்தது.

ஜேம்ஸ் நிஷம் vs ஆகாஷ் சோப்ரா:

ஆகாஷ் சோப்ரா தனது யூடியுப் வீடியோவில் ஜேம்ஸ் நிஷமை அணியில் எடுத்தது தொடர்பாக கருத்தை தெரிவித்திருந்தார். இதனை ரசிகர் ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு நிஷமை டேக் செய்திருந்தார். அதற்கு நிஷம், ஆகாஷ் சோப்ராவின் ஐபிஎல் ரெகார்டை எடுத்து பதிலளித்தார்.

மண்காட் செய்ய மறுத்த அஸ்வின்:

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ஆரோன் ஃபிஞ்ச் அஸ்வின் பந்து வீசும் முன் எல்லைக் கோட்டிற்கு வெளியே சென்றார். அப்போது அஸ்வின் அவரை அவுட் செய்யாமல் எச்சரிக்கை செய்தார். ஆட்டத்திற்கு பிறகு இது தொடர்பாக அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

மும்பை அணியின் ட்விட்டர் பதிவு:

மும்பை-டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது மும்பை அணியின் ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சையான ட்வீட் பதிவிட பட்டது. அதில் ஆட்டத்தின் தொடக்கத்திற்கு முன்பே டெல்லி அணி 20 ஓவர்களில் 163 ரன்கள் எடுத்ததாக பதிவிடப்பட்டது. அந்தப் போட்டியில் டெல்லி அணி சரியாக 162 ரன்கள் எடுத்தது. இதனால் இது மேட்ச் ஃபிக்சிங் என்ற புகார் எழுந்தது.

வைடு முடிவை மாற்றிய நடுவர்:

சென்னை-ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் நடுவர் பால் ரைஃபிள் 19ஆவது ஓவரில் வைடு கொடுக்க முற்பட்டார். அப்போது சென்னை கேப்டன் தோனி கோபத்துடன் பார்த்தார். இதனைக் கண்டு நடுவர் தனது வைடு முடிவை மாற்றினார். எனினும் ரீப்ளேவில் பந்து வைடாக இருந்தது தெரியவந்தது. இதுவும் பெரிய சர்ச்சைக்கு உள்ளானது.

மேட்ச் ஃபிக்சிங் புகார்:

யுஏஇயில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் தொடரில் மேட்ச் ஃபிக்சிங் செய்ய ஒருவர் தன்னை தொடர்பு கொண்டதாக வீரர் ஒருவர் பிசிசிஐயிடம் புகார் அளித்தார். அந்த வீரர் யார் என்ற விவரத்தை பிசிசிஐ ரகசியமாக வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: பள்ளியின் கழிப்பறையை சீரமைத்து அசத்திய சின்ன ‘தல’ ரெய்னா

Next Story
Share it