‘ஜீவா திரைப்படம், ஐபிஎல் டூ இந்திய கிரிக்கெட் அணி’- வருண் சக்ரவர்த்தியின் போராட்டப் பயணம் 

Update: 2020-10-27 11:28 GMT

ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வருண் சக்ரவர்த்தி இடம்பெற்றுள்ளார். இதற்கு காரணம் அவர் சிறப்பான ஐபிஎல் தொடர் தான். நடப்பு ஐபிஎல் தொடரில் ஒரே போட்டியில் ஐந்து விக்கெட் எடுத்து வருண் அசத்தியுள்ளார். அத்துடன் வார்னர், தோனி என பல முன்னணி வீரர்களை இவர் ஆட்டமிழக்க செய்துள்ளார்.

இந்நிலையில் வருண் சக்ரவர்த்திக்கும் திரைப்படத்திற்கு என்ன தொடர்பு? வருண் சக்ரவர்த்தி சிறு வயது முதல் கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்டுள்ளார். இதற்காக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென் என பல பரிமானங்களை அவர் எடுத்துள்ளார். எனினும் அவருக்கு அணியில் வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் இவர் பி.ஆர்க் பட்டப்படிப்பை முடித்து வேலை செய்ய தொடங்கியுள்ளார்.

பின்னர் 2014ஆம் ஆண்டு வெளிவந்த கிரிக்கெட் தொடர்பான படமான ‘ஜீவா’ படத்த்ல் வருண் சக்ரவர்த்தி ஒரு வீரராக விஷ்ணு விஷாலுடன் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இவருக்கு கிரிக்கெட் மீது இருந்த காதலால் முயற்சி செய்து கொல்கத்தா அணியின் நெட் பவுலராக வாய்ப்பை பெற்றார். அப்போது கொல்கத்தா அணியின் சுழல் நாயகன் சுனில் நரேனின் பயிற்சியாளரை வருண் மிகவும் கவர்ந்துள்ளார்.

அதன்பின்னர் டிஎன்பில் தொடரில் கலக்கியதால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் 2019ஆம் ஆண்டு இடம்பெற்றார். எனினும் அப்போது காயம் ஏற்பட்டதால் ஒரு போட்டிக்கு மேல் அவரால் விளையாட முடியவில்லை. நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக களமிறங்கி அசத்தி வரும் வருண் சக்ரவர்த்தி தற்போது இந்திய அணியில் இடத்தை பிடித்து அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு சொதப்பிய டாப்-5 வீரர்கள்