TOKYO Olympics start in
:
Days
:
Hrs
:
Min
Sec
Begin typing your search above and press return to search.

அண்மை செய்திகள்

ஐபிஎல்: அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு சொதப்பிய டாப்-5 வீரர்கள்

ஐபிஎல்: அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு சொதப்பிய டாப்-5 வீரர்கள்
X
By

Ashok M

Published: 24 Oct 2020 3:59 AM GMT

நடப்பு ஐபிஎல் தொடர் கிட்டதட்ட இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்தத் தொடரில் தமிழ்நாடு வீரர்கள் பலர் சிறப்பாக கலக்கி வருகின்றனர். அத்துடன் உள்ளூர் வீரர்கள் சிலரும் அசத்தி வருகின்றனர். எனினும் அதிக விலை ஏலத்தில் எடுக்கப்பட்ட ஒரு சில வீரர்கள் மிகவும் சொதப்பி வருகின்றனர். அவர்கள் யார்? யார்?

கேதார் ஜாதவ்:(7.8 கோடி ரூபாய்)

கேதார் ஜாதவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7.8 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்தது. இவர் ஒரு நடுகள ஆட்டக்காரராக சென்னை அணியில் களமிறங்கி வருகிறார். நடப்பு ஐபிஎல் தொடரில் சுரேஷ் ரெய்னா இல்லாததால் இவர் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்தது. இவை அனைத்திற்கும் அவர் ஒரு பெரிய ஏமாற்றமாகவே அமைந்துள்ளார். இதுவரை 8 போட்டிகளில் களமிறங்கிய கேதார் ஜாதவ் வெறும் 62 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். அத்துடன் அனைத்து போட்டிகளிலும் மிகவும் ஆமை வேகத்தில் ரன்களை சேர்த்து பெரிய அதிர்ச்சியை தந்துள்ளார்.

ஆன்ட்ரே ரசல்(8.5 கோடி ரூபாய்):

கொல்கத்தா அணியின் அதிரடி வீரரான ஆன்ட்ரே ரசல் நடப்பு ஐபிஎல் தொடரில் மிகவும் சுமாராக விளையாடி வருகிறார். இதுவரை 9 போட்டிகளில் விளையாடி உள்ள ரசல் வெறும் 92 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். அத்துடன் பந்துவீச்சில் 6 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். கொல்கத்தா அணியின் பேட்டிங் சற்று வலு இழந்து காணப்படுவதற்கு இவரும் ஒரு காரணம்.

கிளென் மேக்ஸ்வெல்(10.75 கோடி ரூபாய்):

ஆஸ்திரேலிய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான மேக்ஸ்வெல் நடப்பு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக களமிறங்குகிறார். இவரும் இம்முறை சிறப்பாக விளையாடவில்லை. பஞ்சாப் அணியில் கே.எல்.ராகுல், அகர்வால் மற்றும் கெய்ல் சிறப்பாக விளையாடுவதால், மேக்ஸ்வெலின் சொதப்பலான ஆட்டம் வெளியே தெரியவில்லை. மேக்ஸ்வெல் இதுவரை 10 போட்டிகளில் விளையாடி வெறும் 90 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். அத்துடன் இவருடைய சுழற்பந்து வீச்சும் இம்முறை எடுபடவில்லை.

ஜெயதேவ் உனாட்கட்(11.5 கோடி ரூபாய்):

2020ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு வரும் முன்னர் சிறப்பான ஃபார்மில் இருந்த வீரர் ஜெயதேவ் உனாட்கட். இவர் முதல்முறையாக சவுராஸ்டிரா அணி ரஞ்சிக் கோப்பை வெல்ல காரணமாக இருந்தார். எனவே நடப்பு தொடரில் இவர் மீது அதிக எதிர்பார்ப்புகள் எழுந்தன. அவை அனைத்தும் தற்போது ஏமாற்றமாகவே அமைந்துள்ளது. இவர் இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் 4 விக்கெட்களை மட்டும் வீழ்த்தியுள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் உனாட்கட், ஆர்ச்சருக்கு பக்க பலமாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளது.

பாட் கம்மின்ஸ்(15.5 கோடி ரூபாய்):

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இம்முறை வெளிநாட்டு வீரர்கள் யாரும் பெரிதாக விளையாடவில்லை. கேப்டன் மோர்கன் மட்டும் ஒரு சில போட்டிகளில் நன்றாக விளையாடி வருகிறார். மற்ற வெளிநாட்டு வீரர்கள் மிகவும் சொதப்பி வருகின்றனர். குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸ் மிகவும் மோசமான ஃபார்மில் உள்ளார். இவர் இதுவரை விளையாடியுள்ள 10 போட்டிகளில் வெறும் 3 விக்கெட் மட்டுமே வீழ்த்தியுள்ளார். இதனால் கொல்கத்தா அணியின் பந்து வீச்சும் சற்று வலு இழந்துள்ளது.

மேலும் படிக்க: ‘டிராப் கேட்ச் டூ அரைசதம்’- ட்ரோலுக்கு திவேட்டிய பாணியில் பதிலளித்த விஜய் சங்கர்

Next Story
Share it