‘வீக் ஆஃப் ஸ்போர்ட்ஸ்’ கொண்டாடும் ஃபாஸ்ட் அண்ட் அப் நிறுவனம் !

Update: 2021-01-24 11:03 GMT

ஃபாஸ்ட் அண்ட் அப் என்ற சத்துப் பொருள் தயாரிக்கும் நிறுவனம் இந்திய விளையாட்டில் உலகில் பல வீரர்களுக்கு மிகவும் துணையாக உள்ளது. அவர்களின் ஊட்டச்சத்தை அதிகரிக்கும் வகையில் இந்த நிறுவனத்தின் பொருட்கள் அமைந்துள்ளன.

இந்நிலையில் இந்த நிறுவனம் ‘வீக் ஆஃப் ஸ்போர்ட்ஸ்’ என்ற பெயரில் தனது பொருட்களை பயன்படுத்து விளையாட்டு வீரர்களுடன் ஒரு நேர்காணலை நடத்தி வருகிறது. அந்தவகையில் இந்த நிறுவனம் கிரிக்கெட், கால்பந்து, கபடி உள்ளிட்ட விளையாட்டுகள் மட்டுமில்லாமல் கோ-கோ, களரியபட்டு, குஸ்தி போன்ற விளையாட்டு வீரர்கள் உடனும் தனது நேர்காணலை நடத்தி வருகிறது.

ஆசிய ஓன் என்ற தொழில் மற்றும் செய்தி நாளிதழ் ஃபாஸ்ட் அண்ட் அப் நிறுவனம் தான் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் விளையாட்டு சத்து பொருள் நிறுவனம் என்று கணித்துள்ளது. அத்துடன் இந்த நிறுவனத்தின் வளர்ச்சியையும் அது பாராட்டியுள்ளது. இந்த நிறுவனம் அனைத்து வகையான விளையாட்டுகளுடன் தொடர்பு படுத்தி கொண்டு வருகிறது. அத்துடன் இந்நிறுவனம் பாரம்பரிய விளையாட்டுகளையும் ஊக்குவிக்கும் விதமாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: ‘ஒரு காலை இழந்தார்; நம்பிக்கையை இழக்கவில்லை’- சாதித்த தமிழன் ஆனந்த் குணசேகரன் கதை!