'குண்டாக இருக்கிறீர்கள்' என்று சொல்லப்பட்ட பல் மருத்துவர் பவர் லிஃப்டிங்கில் சாம்பியனான எழுச்சிப் பயணம் !

Update: 2021-01-22 02:33 GMT

பெண்கள் பலர் சாதிக்க திருமணம் மற்றும் குழந்தைகள் தடையாக இருப்பார்கள் என்ற போலி நம்பிக்கையுடன் உள்ளனர். இந்த நம்பிக்கை போலியானது தான் என்பதை நிரூபிக்கும் விதமாக ஆர்த்தி அருணின் வெற்றிப் பயணம் அமைந்துள்ளது. யார் இந்த ஆர்த்தி அருண்? அப்படி இவர் என்ன செய்தார்?

தமிழ்நாட்டைச் சேர்ந்த 43 வயதான ஆர்த்தி அருண் ஒரு பல் மருத்துவர். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். 2017ஆம் ஆண்டு இவருக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது. அதன்பின்னர் இவரின் உடல் எடை சற்று அதிகரித்துள்ளது. இதனால் பலர் இவரை கிண்டல் செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இவர் உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்துள்ளார்.

இதற்காக இவர் ஜிம் ஒன்றில் சேர்ந்துள்ளார். அங்கு இவர் வெயிட் லிஃப்டிங் கருவிகளை பார்த்து ஆர்வம் அடைந்துள்ளார். எனினும் அந்த ஜிம்மில் இருந்தவர்கள் உங்களால் இதனை தூக்க முடியாது என்று கூறியுள்ளனர். இதனை ஒரு சவாலாக ஏற்ற ஆர்த்தி தீவிரமாக பயிற்சி செய்துள்ளார். பின்னர் இந்தக் கருவிகளையும் தூக்கி அசத்தியுள்ளார்.

இவரின் ஆர்வத்தை பார்த்த பயிற்சியாளர் இவரை பவர் லிஃப்டிங் செய்யுமாறு அறிவுரை வழங்கியுள்ளார். அவரின் அறிவரையை ஏற்று இவர் பவுர் லிஃப்டிங் விளையாட்டில் பயிற்சி மேற்கொண்டுள்ளார். இந்த விளையாட்டு போட்டியில் 5 தங்கப் பதக்கங்களையும் வென்று இவர் அசத்தியுள்ளார். கடைசியாக 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய பவுர் லிஃப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் இவர் தங்கம் வென்று அசத்தினார்.

பெண்கள் சாதிக்க திருமணம் தடையாக இருக்காது என்பதற்கு ஆர்த்தி அருண் போன்றவர்கள் பெரிய சான்று திகழ்ந்து வருகின்றனர். ஆர்த்தியை பார்த்து பல பெண்களும் தங்கள் தடைகளை உடைத்து சாதிப்பார்கள் என்று எதிர்பார்த்து காத்திருப்போம்.

மேலும் படிக்க: இந்தியா-ஆஸி. தொடரின் போது அதிகம் பேசப்பட்ட வீரர்கள் யார் யார் தெரியுமா?