ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்: பத்தக வேட்டை நடத்துடமா இந்தியா? டெல்லியில் நாளை தொடக்கம்

Update: 2020-02-17 11:31 GMT

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் டெல்லியில் நாளை முதல் தொடங்க உள்ளது. இதில் இந்தியா சார்பில் 30 பேர் கலந்து கொள்ள உள்ளனர். ஆடவர் பிரிவில் 10 பேரும், மகளிர் பிரிவில் 10 பேரும் கிரேக்க ரோமன் பிரிவில் 10 பேரும் களமிறங்க உள்ளனர்.

இப்போட்டியில் சிறப்பாக விளையாடினால் ஆசிய ஒலிம்பிக் மல்யுத்த தகுதிப் போட்டிகளில் இடம்பெறும் வாய்ப்பு கிடைக்கும். ஆகவே இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு உள்னர். இந்தப் போட்டிகளுக்கு வடகொரியா மற்றும் சீனா நாடுகளின் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்காததால் இந்திய வீரர்கள் பக்கம் அதிக கவனம் திரும்பியுள்ளது.

இந்நிலையில்

இந்தத் தொடரில் இந்தியா

சார்பில் தங்கப் பதக்கம்

வெல்லும் தகுதி உடையவர்கள்

பஜ்ரங் புனியா, வினேஷ்

போகட் மற்றும் ரவி தஹியா.

இவர்களில்

குறிப்பாக பஜ்ரங் புனியா

கடந்த 2018ஆம்

ஆண்டு முதல் சிறப்பாக விளையாடி

வருகிறார். இவர்

2018ஆம்

ஆண்டு நடைபெற்ற ஆசிய போட்டி,

காமன்வெல்த்

போட்டியில் இவர் தங்கம்

வென்றார்.

அதன்பின்னர்

நடைபெற்ற உலக மல்யுத்த

சாம்பியன்ஷிப் போட்டியில்

இவர் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

மேலும்

கடந்த ஆண்டு நடைபெற்ற மல்யுத்த

சாம்பியன்ஷிப் போட்டியில்

இவர் வெண்கலப் பதக்கம் வென்றார்.

இந்தாண்டின்

தொடக்கத்தில் நடைபெற்ற ரோம்

ரேங்கிங் சீரிஸ் போட்டியில்

புனியா தங்கப்பதக்கம் வென்று

அசத்தினார். எனவே

இந்த ஃபார்முடன் ஆசிய

சாம்பியன்ஷிப்பிலும் புனியா

தங்கம் பதக்கம் வெல்லுவார்

என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல

மற்றொரு ஆடவர் மல்யுத்த வீரரான

ரவி தஹியா ரோம் ரேங்கிங்

சீரிஸ் போட்டியில் 57

கிலோ எடைப்

பிரிவில் தங்கம் வென்று நல்ல

ஃபார்மில் உள்ளார்.

மகளிர்

பிரிவில் வினேஷ் போகட் ஏற்கெனவே

ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிப்

பெற்று இருந்தாலும் இந்தத்

தொடரில் தங்கப் பதக்கம்

வென்றால் அவருக்கு நல்ல

நம்பிக்கையாக இருக்கும்.

இவர்கள் தவிர உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப்பதக்கம் வென்ற தீபக் புனியா, சாக்‌ஷி மாலிக், சோனம் மாலிக், ஆஷூ உள்ளிட்டவர்கள் களமிறங்க உள்ளனர். நாளை முதல் வரும் 23ஆம் தேதி வரை நடைபெறும் இத்தொடரில் காலையில் முதல் மற்றும் இரண்டாம் சுற்றுப் போட்டிகள் நடைபெற உள்ளன.

மாலை 6 மணிக்கு மேல் பிரதான சுற்றுகள் நடைபெற உள்ளன. கடந்த முறை நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் மல்யுத்த போட்டிகளில் இந்திய அணி 16 பதக்கங்களை வென்றது. பஜ்ரங் புனியா மட்டும் தங்கப் பதக்கம் வென்றார். 6 பேர் வெள்ளிப் பதக்கமும் 9 பேர் வெண்கலப் பதக்கமும் வென்றது குறிப்பிடத்தக்கது.