சனிக்கிழமை, ஜனவரி 23, 2021
Home அண்மை செய்திகள் "பத்ம விருதுகளுக்கான விளையாட்டு வீரர்களை யார் தேர்வு செய்கிறார்கள்?"- மல்யுத்த வீராங்கனை வினேஷ் காட்டம்

“பத்ம விருதுகளுக்கான விளையாட்டு வீரர்களை யார் தேர்வு செய்கிறார்கள்?”- மல்யுத்த வீராங்கனை வினேஷ் காட்டம்

கடந்த 2018ஆம் ஆண்டு விளையாட்டு கழகம் வினேஷ் பெயரை விருதிற்கு பரிந்துரைத்திருந்தது. அந்த சமயம் வினேஷ் போகட்டிற்கு பத்ம விருதுகள் வழங்கப்படவில்லை .

கடந்த சனிக்கிழமை நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோமிற்கு பத்ம விபூஷன் விருதும், பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவிற்கு பத்ம பூஷன் விருதும் அறிவிக்கப்பட்டது. மேலும் 6 விளையாட்டு வீரர்களுக்கு பத்மஶ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருதுகளுக்கான வீரர்கள் பரிந்துரைப்புப் பட்டியலில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் இடம் பெற்று இருந்தார். ஆனால் அவருக்கு விருது வழங்கப்படவில்லை. இந்நிலையில் இந்த விருதுகள் குறித்து மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “ஒவ்வொரு ஆண்டும் சில விளையாட்டு வீரர்களுக்கு அரசு விருது வழங்குகிறது. இந்த விருதுகள் வீரர்களுக்கு ஒரு நல்ல ஊக்கமாக அமைகிறது. அத்துடன் இது அவர்களை தங்களின் இலக்கை நோக்கி பயணிக்க உத்வேகம் அளிக்கிறது.

எனினும் சில நேரங்களில் இந்த விருதுகள் சமீபத்தில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் மற்றும் வெற்றிகளுக்கு கிடைப்பதில்லை. இதனால் தகுதியான சில வீரர்களுக்கு இந்த அங்கிகாரம் கிடைக்காமல் போகிறது. இது சமீபத்தில் ஒரு தொடர் கதையாகவே மாறியுள்ளது. இதற்கு 2020 பத்ம விருதுகள் பட்டியல் விதி விலக்கு அல்ல. இந்த விருதுகளின் வெற்றியாளரை யார் தீர்மானிக்கிறார்கள்? விருதிற்கான தேர்வுக் குழுவில் விளையாட்டு வீரர்கள் யாரும் இடம் பெற்றுள்ளனரா? அவர்கள் எவ்வாறு விருதுகளுக்கு வீரர்களை தேர்வு செய்கின்றனர்? இறுதியில் இவை அனைத்தையும் பார்க்கும் போது அந்நீதி இழைக்கப்பட்டது போன்று தோன்றுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட்

ஏற்கெனவே ஆசிய போட்டிகள் மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற வினேஷ் போகட்டிற்கு 2016ஆம் ஆண்டு மத்திய அரசு அர்ஜூனா விருது வழங்கியது. கடந்த ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் மல்யுத்த போட்டுகளில் வினேஷ் போகட் வெண்கல பதக்கம் வென்றார். அத்துடன் அவர் இந்தாண்டு நடைபெறும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடவும் தகுதிப் பெற்றார். மேலும் கடந்த 2018ஆம் ஆண்டு விளையாட்டு கழகம் வினேஷ் பெயரை விருதிற்கு பரிந்துரைத்திருந்தது. அந்த சமயம் வினேஷ் போகட்டிற்கு பத்ம விருதுகள் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா-ஆஸி. தொடரின் போது அதிகம் பேசப்பட்ட வீரர்கள் யார் யார் தெரியுமா?

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை இந்திய கிரிக்கெட் அணி வெற்றியுடன் நிறைவு செய்துள்ளது. இந்தச் சுற்றுப் பயணத்தின் தொடக்கத்தில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்தது. எனினும் அதன்பின்னர் நடைபெற்ற டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களை 2-1 என்ற கணக்கில் வென்று சாதனைப் படைத்தது. இந்நிலையில் இந்தத் தொடர் முழுவதும் அதிகமாக ட்ரெண்டான வீரர்கள் என்றால் அது நடராஜன் மற்றும்...