TOKYO Olympics start in
:
Days
:
Hrs
:
Min
Sec
Begin typing your search above and press return to search.

அண்மை செய்திகள்

மகளிர் டி20 உலகக் கோப்பை: அரை இறுதிக்கு முன், இந்திய அணி மாற்ற வேண்டிய 4 விஷயங்கள்

மகளிர் டி20 உலகக் கோப்பை: அரை இறுதிக்கு முன், இந்திய அணி மாற்ற வேண்டிய 4 விஷயங்கள்
X
By

Ashok M

Published: 27 Feb 2020 1:46 PM GMT

நடப்பு மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதுவரை விளையாடியுள்ள மூன்று போட்டிகளையும் வென்று இந்திய அணி அரையிறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளது.

டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி செல்லும் நான்காவது அரையிறுதி இதுவாகும். இதற்கு முன்பு இந்திய மகளிர் அணி 2009,2010 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடர்களில் அரையிறுதிக்கு முன்னேறி இருந்தது. எனினும் அந்த 3 முறையும் இந்திய அணி அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்தது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான குரூப் போட்டியில் இந்திய அணி சற்று தடுமாறியே வெற்றிப் பெற்றது. ஆகவே நான்காவது முறையாக அரையிறுதிப் போட்டியில் தோற்று வெளியேறாமல் இருக்க இந்திய அணி சில விஷயங்களில் சற்று முன்னேற்றம் காண வேண்டும். அவை என்ன?

ஜெமிமா ரோட்ரிக்ஸ்

டெர்த் ஓவர் பேட்டிங் (கடைசி 10 ஓவர்):

இதுவரை நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் இந்திய அணி முதல் 10 ஓவர்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதற்கு காரணம் ஷபாலி வர்மாவின் அதிரடியேயாகும். எனினும் அடுத்த 10 ஓவர்களில் இந்திய அணி மிகவும் குறைந்த ரன்களையே எடுப்பதால் இந்திய அணியின் ஸ்கோர் ஒரு 10-20 ரன்கள் குறைந்து விடுகிறது.

இன்றைய போட்டியிலேயே முதல் 10 ஓவர்களில் 75 ரன்கள் எடுத்திருந்த இந்திய அணி அடுத்த 10 ஓவர்களில் 58 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதற்கு முக்கிய காரணம் இந்திய அணியின் மிடில் ஆர்டர் சரியாக விளையாடாததே ஆகும். ஃபினிஷராக யாரும் இந்திய அணியில் சொபிக்கவில்லை. இறுதியில் எந்த வீராங்கனையும் அதிரடி காட்ட வில்லை.

மகளிர் டி-20

கேப்டன் ஹர்மன்பிரீத் ஃபார்ம்:

இதுவரை விளையாடியுள்ள மூன்று போட்டிகளில் இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் சிங்கின் அதிகபட்ச ஸ்கோர் 8 ரன்கள் ஆகும். இவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் 2 ரன்களும் நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் 1 ரன்னும் எடுத்து அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.

இந்திய மகளிர் அணியில் இருக்கும் அனுபவம் வாய்ந்த அதிரடி ஃபினிஷர் ஹர்மன்பிரீத் கவுர் தான். இவருடைய மோசமான ஃபார்மால் இந்திய அணி இறுதி கட்டத்தில் அதிரடி காட்ட தவறியுள்ளது. இதுவரை நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் இந்திய அணி முதலில் ஆடியுள்ளது. எனவே சேஸ்ஸிங் செய்யும் போது இது ஒரு பெரிய பின்னடைவாக இந்தியாவிற்கு அமையும்.

மகளிர் டி-20

ரன்னிங் பிட்வீன் விக்கெட் :

அதேபோல இந்திய வீராங்கனைகள் பேட்டிங்கின் போது ஓடுவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஆஸ்திரேலியாவில் பொதுவாக மைதானங்கள் பெரிதாக இருக்கும். எனவே அங்கு வேகமாக ஓடி ரன் எடுத்து ஃபீல்டர்கள் மீது சற்று நெருக்கடி செய்தால் ஒரு ரன் இரண்டு ரன்னாக மாற வாய்ப்பு அதிகம் உள்ளது. இந்திய அணி அதை செய்ய தவறி வருகிறது. மேலும் ரன் எடுக்கும் போது எதிரணியின் ஃபீல்டர்களை இந்திய வீராங்கனைகள் நெருக்கடி தருவதே இல்லை. இதனால் சிங்கிள் மட்டுமே அதிகம் எடுக்கின்றனர்.

ஃபீல்டிங்கில் முன்னேற்றம்:

இந்திய வீராங்கனைகள் ஃபீல்டிங் செய்யும் போது எதிரணிக்கு மிகவும் எளிதாக நிறையே சிங்கிள் ரன்களை வழங்கி வருகின்றனர். அந்த இடத்தை ஃபீல்டிங்கில் இந்திய அணி சரி செய்ய வேண்டும். கேட்ச்களை பிடிப்பதில் இந்திய அணி சற்று முன்னேற்றம் கண்டுள்ளது. அதேபோல எளிதில் சிங்கிள் தராமால் ஃபீல்டிங்கில் முன்னேற்றம் செய்தால் அது எதிரணிக்கு அதிக நெருக்கடியாக அமையும்.

ஃபீல்டிங்

ஆகவே இந்த நான்கு விஷயங்களில் இந்திய அணி அதிக கவனம் செலுத்த வேண்டும். இந்திய அணிக்கு கடைசி லீக் போட்டி நாளை மறுநாள் நடைபெறுகிறது. அதன்பின்னர் இந்திய அணிக்கு குறைந்தது ஒரு மூன்று நாட்கள் இடைவேளை உள்ளது. அந்த சமயத்தில் இந்திய வீராங்கனை சற்று தீவிர பயிற்சி செய்தால் இந்த விஷயங்களில் முன்னேற்றும் காணலாம். மேலும் இதுவரை மகளிர் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக முறை அரையிறுதியில் தோல்வி அடைந்த அணியாக இந்திய அணி உள்ளது. இதனை இம்முறை இந்திய அணி மாற்றும் என ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

Next Story
Share it