சனிக்கிழமை, ஜனவரி 23, 2021
Home அண்மை செய்திகள் ”இந்தியாவிற்கு எதிராக விளையாடுவது எனக்கு பிடிக்காது”-  பயப்படும் ஆஸி. வேகப்பந்து வீச்சாளர் மேகன் ஸ்கட்

”இந்தியாவிற்கு எதிராக விளையாடுவது எனக்கு பிடிக்காது”-  பயப்படும் ஆஸி. வேகப்பந்து வீச்சாளர் மேகன் ஸ்கட்

மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் வரும் ஞாயிற்றுகிழமை இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் மோதவுள்ளன.

மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் வரும் ஞாயிற்றுகிழமை இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் மோதவுள்ளன. இந்தத் தொடரில் இரு அணிகளும் அதிக பலம் கொண்ட அணியாக பார்க்கப்படுவதால் இப்போட்டி தொடர்பான விறுவிறுப்பு அதிகமாகியுள்ளது. 

இந்நிலையில் இந்தப் போட்டி தொடர்பாக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மேகன் ஸ்கட் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “இந்தியாவிற்கு எதிராக விளையாடுவது எனக்கு எப்போதும் பிடிக்காது. ஏனென்றால் இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தானா மற்றும் ஷாபாலி வர்மா ஆகிய இருவரும் எனது பந்துவீச்சை சுலபமாக அடித்து நொறுக்கிவிடுவார்கள். 

மேலும் முத்தரப்புத் தொடரில் ஷாபாலி வர்மா எனது பந்தில் அடித்த சிக்சர் தான் எனது பந்தில் ஒருவர் அடித்த மிகவும் நீளமான சிக்சர். இதனால் அந்த சிக்சரை நான் இன்னும் மறக்கவில்லை. எனவே இறுதிப் போட்டியில் நான் பவர்பிளேவில் பந்துவீசினால் அவர்கள் இருவரும் எனது பந்துகளை விளாசி விடுவார்கள்

ஸ்மிருதி மந்தானா-ஷாபாலி வர்மா

ஆகவே நான் இவர்களுக்கு எதிராக பவர்பிளேவில் பந்துவீச மாட்டேன். எனினும் நாங்கள் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவிற்கு எதிராக நாங்கள் இறுதிப் போட்டியில் விளையாடுவது இரு அணிகளுக்குமே சற்று நல்லது தான். ஏனென்றால் நாங்கள் இருவரும் பல முறை சமீபத்தில் மோதியுள்ளதால் இரு அணிகள் பலம் மற்றும் பலவீனம் எங்களுக்கு தெரியும். இதுபோன்று நன்றாக தெரிந்த அணிக்கு எதிராக இறுதிப் போட்டியில் விளையாடுவது சற்று எளிதாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார். 

இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் உலகக் கோப்பை தொடருக்கு முன்பு முத்துரப்பு டி20 தொடரில் பங்கேற்றனர். அப்போது மேகன் ஸ்கட் வீசிய பந்தை ஷபாலி வர்மா சிக்சருக்கு விளாசியது சமூக வலைத்தளத்தில் வைரலானது. அப்போது பலரும் ஷபாலி வர்மாவை பாராட்டியிருந்தனர். மகளிர் டி20 பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்திலுள்ள மேகன் ஸ்கட்டின் பந்தை சுலபமாக ஷபாலி சிக்சருக்கு அடித்தது அனைவரையும் வியக்க வைத்தது. 

மேகன் ஸ்கட் நடப்பு உலகக் கோப்பை தொடரில் வீசிய முதலாவது ஓவரில் இந்திய வீராங்கனைகள் ஷாபாலி மற்றும் மந்தானா 16 ரன்கள் விளாசினர். மேகன் ஸ்கட் டி20 போட்டிகளில் ரன் கொடுக்கும் (எகானமி ரேட்) 5.98 ஆக உள்ளது. ஆனால் இந்தியாவிற்கு எதிராக மேகன் ஸ்கட் சராசரியாக ஒரு ஓவருக்கு 6.93 ரன்கள் வழங்குகிறார். 

மேலும் மேகன் ஸ்கட் சராசரியாக டி20 போட்டிகளில் 15.68 பந்துகளில் ஒரு விக்கெட் வீழ்த்துகிறார். ஆனால் இந்தியாவுடன் அவர் ஒரு விக்கெட் எடுக்க சராசரியாக 24.66 பந்துகள் தேவைப்படுகிறது.  இந்தத் தரவுகளை வைத்து பார்க்கும் போது மகளிர் கிரிக்கெட்டில் சிறப்பான பந்துவீச்சாளரான மேகன் ஸ்கட் ஏன் இந்தியாவை பார்த்து அஞ்சுகிறார் என்பது தெளிவாக தெரிகிறது. மேகன் ஸ்கட்டின் பயம் உண்மையாகி இந்திய அணி முதல் முறையாக டி20 உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே இந்திய ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. 

தந்தை இறப்பு, இனவெறி தாக்குதல் டூ 5 விக்கெட்- முகமது சிராஜின் எழுச்சிப் பயணம்!

முகமது சிராஜின் எழுச்சிப் பயணம்!
ஆஸ்திரேலியா-இந்தியா அணிகள் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் நான்காவது நாளான இன்று இந்திய வீரர் முகமது சிராஜ் சிறப்பாக பந்துவீசி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இந்நிலையில் இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன்பே சிராஜிற்கு பெரிய சோதனை காத்திருந்தது. அதாவது ஆஸ்திரேலிய தொடர் தொடங்குவதற்கு முன்பே...