செவ்வாய்க்கிழமை, ஜனவரி 19, 2021
Home அண்மை செய்திகள் இரண்டரை வருட இடைவேளைக்கு பிறகு களமிறங்கி அசத்தும் சானியா !

இரண்டரை வருட இடைவேளைக்கு பிறகு களமிறங்கி அசத்தும் சானியா !

கடைசியாக 2017ஆம் ஆண்டு நடைபெற்ற சீனா ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்றார். அதன்பின்னர் தற்போது 2020ஆம் ஆண்டு மீண்டும் டென்னிஸ் களத்தில் இறங்கியுள்ளார்.

உலக டென்னிஸ் அரங்கில் மிகவும் முக்கிய வீராங்கனைகளில் ஒருவர் இந்தியாவின் சானியா மிர்சா. இவர் தொடக்கத்தில் ஒற்றையர் பிரிவில் அதிக கவனம் செலுத்தி வந்தார். பின்னர் 2013ஆம் ஆண்டிற்கு பிறகு இரட்டையர் போட்டியில் மட்டும் அதிக கவனம் செலுத்த தொடங்கினார்.

அதன் விளைவாக 2015ஆம் ஆண்டு விம்பிள்டன் மற்றும் அமெரிக்க ஓபன் ஆகிய இரண்டு கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் மகளீர் இரட்டையர் பிரிவு பட்டத்தை கைப்பற்றினார். அந்த ஆண்டு இவர் அனுபவ வீராங்கனை மார்டினா ஹிங்கிஸ் உடன் ஜோடி சேர்ந்து களம் கண்டார். இவருக்கும் பாகிஸ்தான் நாட்டின் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிகிற்கும் கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தால் சானியா மிர்சா மீது சர்ச்சை எழுந்தது. அத்துடன் அவர் இந்தியாவிற்காக டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்பாரா என்ற கேள்விகளும் எழுந்தது.

அமெரிக்க ஓபன் சாம்பியன் சானியா மிர்சா

எனினும் திருமணத்திற்கு பிறகும் இவர் இந்தியாவிற்காக டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்று வந்தார். கடைசியாக 2017ஆம் ஆண்டு நடைபெற்ற சீனா ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்றார். அதன்பின்னர் இவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் சிறிது காலம் டென்னிஸ் விளையாடாமல் இருந்து வந்தார்.

அதன்பின்னர் சானியா மிர்சாவிற்கு கடந்த 2018ஆம் ஆண்டு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. மகப்பேறு காரணமாக டென்னிஸ் விளையாட்டில் ஈடுபடாமல் சானியா மிர்சா இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு தான் மீண்டும் பயிற்சி செய்வது தொடர்பாக நிழற்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் சானியா மிர்சா பதிவிட்டு வந்தார்.

அத்துடன் 2020ஆம் ஆண்டு முதல் மீண்டும் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக சானியா தெரிவித்தார். அதன்படி தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ஹோபார்ட் சர்வதேச டென்னிஸ் போட்டி தொடரில் சானியா மிர்சா-நாடியா ஜோடி களமிறங்கியது.

முதலாவது போட்டியில் சானியா ஜோடி ஒக்சானா- மியூ கட்டோ இணையை 2-6,7-6,10-3 என்ற கணக்கில் தோற்கடித்தது. இந்தப் போட்டி முடிந்தவுடன் சானியா மிர்சா தனது சமூகவலைத்தள பக்கத்தில் ஒரு பதிவை ஈட்டிருந்தார். அதில், “இந்நாள் என் வாழ்நாளில் மிகவும் மறக்க முடியாது நாள். ஏனென்றால் இன்று எனது போட்டியை காண என்னுடைய பெற்றோரும், என்னுடைய மகனும் வந்திருந்தனர். அனைவரின் அன்பு மற்றும் ஆதரவிற்கு நன்றி” எனப்பதிவிட்டுருந்தார். அத்துடன் சானிய தனது மகனுடன் வெற்றியை கொண்டாடும் படத்தையும் பதிவிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது சுற்று போட்டி மற்றும் காலிறுதி மற்றும் அரையிறுதி போட்டி ஆகியவற்றில் வெற்றிப் பெற்றுள்ளார். தற்போது ஹோபார்ட் சர்வதேச டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

இந்திய வீராங்கனை சானியா மிர்சா

டென்னிஸ் உலகில் மகப்பேறு இடைவேளைக்கு பிறகு கால் பதித்த கிம் கிளிஸ்டர்ஸ், செரீனா வில்லியம்ஸ் மற்றும் விக்டோரியா அஸரென்கா ஆகியவர்கள் வரிசையில் தற்போது சானியாவும் இணைந்துள்ளார்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு களமிறங்கியுள்ள சானியா மிர்சா மீண்டும் உலக டென்னிஸ் வீராங்கனைகள் தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். அத்துடன் ஏற்கெனவே அவர் வாங்கியுள்ள 6 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களின் எண்ணிக்கையையும் அதிகரிப்பாரா என்பதையும் காத்திருந்தான் தெரிந்து கொள்ளவேண்டும்.

தந்தை இறப்பு, இனவெறி தாக்குதல் டூ 5 விக்கெட்- முகமது சிராஜின் எழுச்சிப் பயணம்!

முகமது சிராஜின் எழுச்சிப் பயணம்!
ஆஸ்திரேலியா-இந்தியா அணிகள் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் நான்காவது நாளான இன்று இந்திய வீரர் முகமது சிராஜ் சிறப்பாக பந்துவீசி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இந்நிலையில் இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன்பே சிராஜிற்கு பெரிய சோதனை காத்திருந்தது. அதாவது ஆஸ்திரேலிய தொடர் தொடங்குவதற்கு முன்பே...