வெள்ளிக்கிழமை, ஜூலை 3, 2020
Home அண்மை செய்திகள் தொடர்ந்து ஒற்றையர் ஆட்டங்களில் ஏமாற்றம் அளிக்கும் ராம்குமார் ராமநாதன்

தொடர்ந்து ஒற்றையர் ஆட்டங்களில் ஏமாற்றம் அளிக்கும் ராம்குமார் ராமநாதன்

Published:

இந்தியாவின் முன்னனி டென்னிஸ் வீரர்களில் ஒருவர் ராம்குமார் ராமநாதன். தனது கரியரை சிறப்பாக ஆரம்பித்தாலும் சமீப காலமாக தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்த முடியாமல் திணறி வருகிறார். தான் பங்கேற்கும் தொடர்களில் பலவற்றில் ஆரம்ப சுற்றுக்களிலேயே வெளியேறுவது வழக்கமாகி வருகிறது. கடந்த வாரம் நடந்த டேவிஸ் கோப்பை ஆட்டத்தில் சிறந்த வீரர்களில் ஒருவரான மரின் சிலிச்சிற்கு எதிராக களமிறங்கிய இவர், அந்த ஆட்டத்தில் தோல்வியடைந்திருந்தாலும் மிகச்சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். இதனால் வரும் ஆட்டங்களில் ஃபார்ம்க்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கஷகஸ்தான் தலைநகர் நூர்-சுல்தானில் தொடங்கிய சேலஞ்சர் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் தன்னை விட தரவரிசையில் பின்னனியில் இருக்கும் டீ ஜாங் என்ற வீரரிடம் 6-2, 6-2 என தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்தார்.

மணீஸ்

மற்றொரு நிகழ்வாக ஃபியுட்சர்ஸ் லெவல் டென்னிஸ் போட்டி கொல்கத்தாவில் நேற்று தொடங்கியது. இது நீண்ட இடைவெளிக்கு பின்னர் இந்தியாவில் நடப்பது குறிப்படதக்கது. இதன்மூலம் வளர்ந்து வரும் இளம் வீரர்களுக்கு நல்ல அனுபவம் கிடைக்கும். இன்று நடந்த ஆட்டங்களில் தமிழகத்தை சேர்ந்த மணீஸ் மற்றும் அபினவ் ஆகியோர் தங்களது ஆட்டங்களில் வெற்றுபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.