செவ்வாய்க்கிழமை, ஜனவரி 19, 2021
Home அண்மை செய்திகள் ஆஸ்திரேலியன் ஓபன்: சானியா மிர்சா காயம்;போபண்ணா தோல்வி, திவிஜ் சரண் வெற்றி

ஆஸ்திரேலியன் ஓபன்: சானியா மிர்சா காயம்;போபண்ணா தோல்வி, திவிஜ் சரண் வெற்றி

காலில் ஏற்பட்டுள்ள சிறிய காயம் காரணமாக கலப்பு இரட்டையர் பிரிவிலிருந்து இந்திய வீராங்கனை சானியா மிர்சா விலகியுள்ளார்.

ஆஸ்திரேலியன் ஓபன் தொடர் டென்னிஸ் போட்டிகள் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகின்றன. இந்தத் தொடரில் இந்தியா சார்பில் ஆடவர் ஒற்றையர் போட்டியில் களமிறங்கிய பிரஜ்னேஷ் முதல் சுற்றில் தோல்வி அடைந்து ஏமாற்றினார்.

இதனால் ஆடவர் மற்றும் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்திய வீரர்கள் அசுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆடவர் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா மற்றும் ஜப்பானின் உசியாமா ஜோடி அமெரிக்காவின் பிரையன் சகோதரர்களை எதிர்கொண்டது.

ரோகன் போப்பண்ணா
ரோகன் போபண்ணா

இந்தப் போட்டியில் முதல் செட்டை 1-6 என்ற கணக்கில் போபண்ணா ஜோடி இழந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது செட்டில் சுதாரித்து கொண்டு ஆடிய போபண்ணா ஜோடி 6-3 என்ற கணக்கில் கைப்பற்றியது. எனினும் மூன்றாவது சுற்றை 3-6 என்ற கணக்கில் போபண்ணா ஜோடி இழந்து பிரையன் சகோதரர்களிடம் தோல்வியை தழுவியது.

மற்றொரு இந்திய வீரரான திவிஜ் சரண், நியூசிலாந்தின் ஆர்டெம் சித்தாக் உடன் ஜோடி சேர்ந்து விளையாடினார். இந்த இணை முதல் போட்டியில் பேப்லோ பஸ்டா மற்றும் ஜோவோ சோவுசா ஜோடியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய திவிஜ் சரண் ஜோடி 6-4,7-5 என்ற கணக்கில் எளிதில் வெற்றிப் பெற்றது. அத்துடன் இரண்டாவது சுற்றிற்கு முன்னேறியுள்ளது.

திவிஜ் சரண்
திவிஜ் சரண்

இதனிடையே ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் பெரும் பின்னடைவாக ஒரு செய்தி கிடைத்துள்ளது. காலில் ஏற்பட்டுள்ள சிறிய காயம் காரணமாக கலப்பு இரட்டையர் பிரிவிலிருந்து இந்திய வீராங்கனை சானியா மிர்சா விலகியுள்ளார். அவர் கலப்பு இரட்டையர் போட்டியில் இந்தியாவின் ரோகன் போப்பண்ணாவுடன் ஜோடி சேர்ந்து விளையாட இருந்தார்.

இதுகுறித்து சானியா மிர்சா டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு, “ஹோபர்ட் ஓபன் இறுதிப் போட்டியில் எனக்கு சிறிய காயம் ஏற்பட்டது. அந்தக் காயம் தற்போது குணமடைந்து வருகிறது. எனினும் ஆஸ்திரேலியன் ஓபன் தொடரில் நான் மகளீர் இரட்டையர் பிரிவில் அதிக கவனம் செலுத்த உள்ளேன். ஆகவே நான் கலப்பு இரட்டையர் பிரிவில் பங்கேற்க போவதில்லை. ரோகன் போப்பண்ணாவுடன் இணைந்து விளையாட முடியாமால் போனது மிகுந்த வறுத்தமளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

சானியா மிர்சா

இதனால் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய வீரர் ரோகன் போபண்ணா சானியாவின் இரட்டையர் பிரிவு இணையான நாடியா உடன் விளையாட உள்ளார். ஏற்கெனவே போபண்ணா இரட்டையர் பிரிவில் தோல்வி அடைந்துள்ளதால், தற்போதைக்கு ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் திவிஜ் சரண் மற்றும் சானியா மிர்சா ஆகிய இருவரும் சிறப்பாக விளையாடுவார்கள் என்ற ரசிகர்கள் ஆர்வம் உடன் உள்ளனர்.

‘காபாவிலிருந்து வணக்கம்’- பெயினுக்கு அஸ்வின் கொடுத்த பதிலடி !

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்று அசத்தியது. விறுவிறுப்பாக நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று சாதனை புரிந்தது. பிரிஸ்பேன் மைதானத்தில் 32 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி முதல் முறையாக தோல்வியை தழுவியுள்ளது. இந்நிலையில் சிட்னியில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலிய...