திங்கட்கிழமை, மார்ச் 1, 2021
Home Blog Page 54
இந்திய வீராங்கனை சானியா மிர்சா

பெட் கோப்பை டென்னிஸ்: விலகினால் சானியாவின் ஒலிம்பிக் வாய்ப்பு பறிபோகுமா?

மகளீர் குழு டென்னிஸ் போட்டியான பெட் கோப்பை அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதற்கான இந்திய அணியில் அனுபவ வீராங்கனை சானியா மிர்சா இடம்பெற்றுள்ளார். அவருடன் சேர்ந்து ரியா பாட்டியா, ருதுஜா போசேலே உள்ளிட்டோர் அணியில் இடம் பிடித்துள்ளனர். இந்த அணியின் பயிற்சியாளராக அங்கிதா பாம்ப்ரி நியமிக்கப்பட்டுள்ளார்....
வினேஷ் போகட்

“பத்ம விருதுகளுக்கான விளையாட்டு வீரர்களை யார் தேர்வு செய்கிறார்கள்?”- மல்யுத்த வீராங்கனை வினேஷ் காட்டம்

கடந்த சனிக்கிழமை நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோமிற்கு பத்ம விபூஷன் விருதும், பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவிற்கு பத்ம பூஷன் விருதும் அறிவிக்கப்பட்டது. மேலும் 6 விளையாட்டு வீரர்களுக்கு பத்மஶ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த...
பி.பி.எல் ஹைதராபாத் ஹண்டர்ஸ்

2020 பி.பி.எல் – வெற்றி கணக்கைத் தொடங்கியது பி.வி சிந்து அண்டு கோ!

2020 பிரீமியர் பேட்மிண்டன் லீக் போட்டிகள் லக்னோவில் நடைபெற்று வருகிறது. பாபு பனாரசி தாஸ் யூ.பி பேட்மிண்டன் அகாடெமியில் இன்று நடந்த டையில் அவாதி வாரியர்ஸ் - ஹைதராபாத் ஹண்டர்ஸ் அணிகள் மோதின. இந்த சீசனின் முதல் டையில் சென்னை அணியிடம் தோல்வியைத் தழுவிய ஹைதராபாத் அணி,...
பிரக்ஞானந்தா

ஜிப்ரால்டர் செஸ் திருவிழா: 4 வெற்றிகளைப் பெற்று பிரக்ஞானந்தா இரண்டாவது இடத்திற்கு முன்னேற்றம்

ஐரோப்பியாவின் ஜிப்ரால்டர் பகுதியில் செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் மொத்தம் 120 வீரர்கள் பங்கேற்று உள்ளனர். இந்தியாவின் சார்பில் சசிகரண், எஸ்.எல்.சூர்யநாரயணன், ரவி தேஜா, இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா உள்ளிட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா தனது நான்காவது வெற்றியைப் பெற்று வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இந்தத் தொடரின் முதல் போட்டியில் பிரக்ஞானந்தா தோல்வி அடைந்தார். பின்னர் நடைபெற்ற நான்கு போட்டிகளிலும் அவர் பெற்றுள்ளார்.
மேரி கோம்

“ஒலிம்பிக்கில் தங்கம் வென்று, பாரத ரத்னா விருது பெற வேண்டும்” – மேரி கோம்

நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகளை இந்திய அரசு நேற்று அறிவித்தது. இதில், குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமிற்கு பத்பவிபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. குத்துச்சண்டை விளையாட்டில், 6 முறை உலக சாம்பியனான மேரி கோம் 2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றவர். இந்திய வரலாற்றில், பத்பவிபூஷன் விருது...
டென்னிஸ்

ஆஸி.ஓபன்: கலப்பு இரட்டையர் பிரிவு போட்டிகளில் பயஸ், போபன்னா முன்னேற்றம்!

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் கலப்பு இரட்டையர் பிரிவு போட்டிகளில் இந்தியாவின் ரோஹன் போபன்னா, லியாண்டர் பயஸ் ஆகியோர் அடுத்த கட்டத்துக்கு முன்னேறியுள்ளனர். இன்று நடைபெற்ற கலப்பு இரட்டையர் பிரிவு இரண்டாம் சுற்றில், இந்தியாவின் ரோஹன் போபன்னா - உக்ரேனியாவின் நதியா கிச்சனோக் இணை, அமெரிக்காவின் நிக்கோல் மெலிசர்...
பூனே 7 ஏஸஸ்

பி.பி.எல் அப்டேட் – கஷ்யப் ஏமாற்றம்… பூனேவிடம் சரண்டரான மும்பை

2020 பிரீமியர் பேட்மிண்டன் லீக் போட்டிகளின் முதற்கட்ட போட்டிகள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து முடிந்தது. இப்போது லக்னோ பாபு பனாரசி தஸ் யூ.பி பேட்மிண்டன் அகாடெமியில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.நேற்று நடந்த முதல் டையில், நடிகை தாப்ஸி, கே.ஆர்.ஐ எண்டெர்டெயின்மெண்ட் ஆகியோர் இணைந்து உரிமையாளராக இருக்கும் பூனே 7 ஏஸஸ் அணியும், மும்பை...
மேரி கோம்-பி.வி.சிந்து பத்ம விருதுகள்

மேரி கோமிற்கு பத்மவிபூஷன் விருதும், பி.வி.சிந்துவிற்கு பத்மபூஷன் விருதும் அறிவிப்பு

இந்திய குடியரசுத் தினத்தை முன்னிட்டை நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பதம் விருதுகளை இந்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி நாட்டிலேயே இரண்டாவது உயரிய விருதான பத்மவிபூஷன் விருது குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோமிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம் 6 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். அத்துடன் அவர்...
குத்துச்சண்டை

ஒலிம்பிக் குத்துச் சண்டை தகுதிப் போட்டிகள் கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவிலிருந்து ஜோர்டானுக்கு மாற்றம்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் ஜூலை 24-ம் தேதி முதல் ஒலிம்பிக் போட்டிகள் நடக்க உள்ளன. இதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் உலகின் வெவ்வேறு நாடுகளில் நடைபெற்ற வருகிறது. இந்நிலையில், சீனாவை மிரட்டும் கொரோனா வைரசால் குத்துச் சண்டைக்கான ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டிகள் ரத்து செய்யப்பட்டன. தற்போது அந்தப் போட்டிகள் ஜோர்டான் நாட்டில் நடைபெறும் என்று சர்வதேச ஒலிம்பிக் சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐ.ஓ.சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,...
ரோகன் போப்பண்ணா

ஆஸ்திரேலியன் ஓபன்: கலப்பு இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் போபண்ணா வெற்றி!

ஆஸ்திரேலியன் ஓபன் தொடர் டென்னிஸ் போட்டிகள் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகின்றன. இதில் கலப்பு இரட்டையர் போட்டிகள் இன்று நடைபெற்றன. இந்தியா சார்பில் கலப்பு இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா இன்று களமிறங்கினார். போபண்ணா-நாடியா ஜோடி அமெரிக்காவின் அஸ்டின் மற்றும் உக்ரைனின் லிட்மாலா இணையை எதிர்கொண்டது. இந்தப் போட்டியின் முதல் செட்டை போபண்ணா ஜோடி 7-5 எனக் கைப்பற்றியது. எனினும் இரண்டாவது செட்டை போபண்ணா ஜோடி 4-6 என்ற கணக்கில் இழந்தது. இதனால் வெற்றியாளரை தீர்மானிக்க மூன்றாவது செட்டாக டை பிரேக்கர் முறை பயன்படுத்தப்பட்டது.

அரசியல் களத்தில் குதிக்கும் கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி!

மேற்கு வங்காளத்தின் ஹெளரா மாநிலத்தைச் சேர்ந்தவர் மனோஜ் திவாரி. இவர் 2008-ஆம் ஆண்டு இந்தியாவிற்காக விளையாட தொடங்கினார். இவரின் அதிரடியான ஆட்டத்திற்காக பல இந்தியர்களின் பாராட்டைப் பெற்றவர். ஆனால் தொடர் காயம் காரணமாக இவர் இந்திய அணியில் தொடர்ந்து இடம் பிடிக்கவில்லை. சமீபத்தில் இயற்றப்பட்ட வேளாண் சட்டத்தை எதிர்த்து பஞ்சாப் விவசாயிகள் டெல்லியில் போராடி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவாக வெளிநாட்டு பிரபலங்கள்...