வியாழக்கிழமை, அக்டோபர் 1, 2020
Home Blog Page 39
குத்துச்சண்டை

குத்துச்சண்டையில் 6 பதக்கங்கள்.. இந்திய மகளிர் அசத்தல்

செர்பியாவில் நடைபெற்ற ‘நேஷன்ஸ் கோப்பை’ குத்துச்சண்டை தொடரில், இந்திய வீராங்கனைகள் பங்கேற்றிருந்தனர். மோனிகா (48 கிலோ), ரிட்டு கிரேவால் (51 கிலோ), மீனா குமாரி (54 கிலோ), பாக்யபதி (75 கிலோ) ஆகிய வீராங்கனைகள், வெவ்வேறு எடைப்பிரிவுகளில் பங்கேற்றிருந்தனர். இவர்கள் நால்வரும் இறுதிப் போட்டியில் விளையாடி வெள்ளிப் பதக்கங்களை வென்றனர். 4 வெள்ளிப்பதக்கங்கள், 2 வெண்கலப் பதக்கங்களுடன் ‘நேஷன்ஸ் கோப்பை’ குத்துச்சண்டையில் இந்திய மகளிர் அசத்தல்.
தமிழ்நாட்டு கூடைப்பந்து அணி

ஐந்து முறை தோல்வி; ஆறாவது முறை வெற்றி: சாதித்த தமிழ்நாட்டு கூடைப்பந்து சிறுமிகள்

கேலோ இந்தியா யூத் கேம்ஸ் 2020 தற்போது அசாம் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 17 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் கூடைப் பந்து போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அணி தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளது. தமிழ்நாட்டுச் சிறுமிகள் இறுதிப் போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்கொண்டனர். இந்தப் போட்டியில் இரண்டு புள்ளிகள் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்தப் போட்டி முடிந்தவுடன் தமிழ்நாட்டு அணியின் நட்சத்திர வீராங்கனை நிவேதா ஒரு நிமிடம் கண்ணீர் மல்க அழுதார். அவரை அணியின் பயிற்சியாளர் ராம் பிரசாத் தட்டிக் கொடுத்து சமாதானப்படுத்தினார்.
டேபிள் டென்னிஸ்

2020 ஒலிம்பிக்: டேபிள் டென்னிஸில் இந்தியா தேர்ச்சி பெறுமா? ஓர் அலசல்!

மணிக்கா பத்ரா, ஷரத் கமல், சத்தியன் ஞானசேகரன் - கடந்த சில ஆண்டுகளாக இந்திய விளையாட்டு உலகை டேபிள் டென்னிஸின் பக்கம் திருப்பிய சாம்பியன்கள் இவர்கள்! 2018 காமன்வெல்த் தொடரில், 3 தங்கம் உள்ப்ட மொத்தம் 8 பதக்கங்களை வென்றது இந்தியா.அப்போது முதலே, டேபிள் டென்னிஸில் பதக்கங்களை எதிர்பார்த்த தொடங்கிவிட்டனர் இந்திய ரசிகர்கள்....
பிரஜ்னேஷ் குணேஷ்வரன்

ஆஸ்திரேலியன் ஓபன்: ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் பிரஜ்னேஷ் தோல்வி

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலியா ஓபன் நேற்று தொடங்கியது. நேற்று ஆஸ்திரேலியாவில் மழை பெய்ததால் சில போட்டிகள் நடைபெறவில்லை. அவை அனைத்து இன்று நடைபெற்று வருகின்றன. இந்தத் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவிற்கு இந்தியாவின் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் லக்கி டிரா மூலம் தகுதி பெற்றார். இவர் ஆஸ்திரேலிய ஓபன் தகுதி சுற்றில் தோல்வி அடைந்தவர்களுக்கு நடத்தப்பட்ட...
ப்ரீமியர் பேட்மிண்டன் லீக்

பிரீமியர் பேட்மிண்ட்ன் லீக்: முதல் நாள் போட்டியில் சென்னை அணி அசத்தல்

பிரீமியர் பேட்மிண்டன் லீக் ஐந்தாவது சீசன் சென்னையில் இன்று தொடங்கியது. ஜவர்ஹர்லால் நேரு மைதானத்தில் தொடங்கிய முதல் நாள் ஆட்டத்தில், சென்னை சூப்பர்ஸ்டார்ஸ் - ஹைதராபாத் ஹன்டர்ஸ் அணிகள் மோதின. இதில் சென்னை அணி அசத்தல் வெற்றி பெற்றது. பேட்மிண்டன் கலப்பு பிரிவு போட்டியில், சென்னையின் ரங்கி...
சங்கர் - பேட்மிண்டன்

1 லட்சத்திற்கு ஏலம்..16 வயதில் பேட்மிண்டன் லீக்… கலக்கும் சென்னை சிறுவன்

7 அணிகள் பங்கேற்கும் ப்ரீமியர் பேட்மிண்டன் லீகின் ஐந்தாவது சீசன் சென்னையில் இன்று தொடங்கியது. அவாதே வாரியர்ஸ், பெங்களூர் ராப்டர்ஸ், சென்னை சூப்பர் ஸ்டார்ஸ், ஹைதரபாத் ஹண்டர்ஸ், மும்பை ராக்கெட்ஸ், நார்த்-ஈஸ்டெர்ன் வாரியர்ஸ், பூனே 7 ஏஸஸ் ஆகிய அணிகள் இதில் பங்கேற்றுள்ளன. இரண்டாவது சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை...
ஹர்ஷவர்தன் செஸ் வீரர்

சென்னை ஓபன் செஸ்: ஜார்ஜியா கிராண்ட் மாஸ்டரை தோற்கடித்த சென்னை பள்ளிச் சிறுவன் ஹர்ஷவர்தன்

சென்னை ஓபன் சர்வதேச செஸ் போட்டிகள் கடந்த சனிக்கிழமை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் 20 நாடுகளைச் சேர்ந்த 37 வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்று உள்ளனர். இந்தச் சென்னை ஓபன் செஸ் போட்டியில் முதல்நிலை வீரராக ரஷ்யாவின் கிராண்ட் மாஸ்டர் பவேல் போன்கிராடோவ் உள்ளார். அத்துடன் பெரு...
மல்யுத்தம்

ரோம் ரேங்கிங் சீரிஸ் மல்யுத்தம்: 7 பதக்கங்களை வென்று இந்தியா அசத்தல்

இத்தாலி தலைநகர் ரோமில் ரேங்கிங் சீரிஸ் சர்வதேச மல்யுத்த போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டியில் இந்தியா சார்பில் மல்யுத்த வீரர்களும் வீராங்கனைகளும் கலந்து கொண்டனர். இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய வீரர் வீராங்கனைகள் மொத்தமாக 7 பதக்கங்களை அள்ளி அசத்தியுள்ளனர். இதில் ஃப்ரீஸ்டைல் மற்றும் கிரேக்க ரோமன் பிரிவில் போட்டிகள் நடைபெற்றன.
பூர்ணா ஶ்ரீ

கேலோ இந்தியா கேம்ஸ் 2020: பளு தூக்குதலில் தங்கம் வென்ற பீடி வியாபாரி மகள்

'கேலோ இந்தியா யூத் கேம்ஸ் 2020’ விளையாட்டுப் போட்டிகள் அசாம் மாநிலம் குவஹாத்தியில் நடைபெற்று வருகின்றன. இதில் 17வயதுக்குட்பட்டோருக்கான 64கிலோ பளு தூக்கும் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பூர்ணா ஶ்ரீ தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இவர் யார்? இவர் கடந்த வந்த பாதை என்ன? வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பூர்ணா ஶ்ரீ. தமிழ்நாட்டில் அதிகப் பளு தூக்கும் வீரர்கள் உருவாகும் மாவட்டம் வேலூர் மாவட்டம். அந்த மாவட்டத்தில் பிறந்தவரான பூர்ணா ஶ்ரீயும் தற்போது பளு தூக்குதல் போட்டியில் அசத்தியுள்ளார்.
ரூபிந்தர் பால் சிங் புரோ லீக்

ஹாக்கி புரோ லீக் தொடர்: முதல் 2 போட்டிகளிலும் நெதர்லாந்தை வீழ்த்தியது இந்திய அணி

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பான எஃப்.ஐ.ஹெச் சார்பில் புரோ லீக் என்ற தொடர் கடந்த ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டிற்கான புரோ லீக் தொடர் இம்மாதம் 11ஆம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் முதல் முறையாக இந்திய ஆடவர் ஹாக்கி அணி பங்கேற்று உள்ளது. இந்திய அணி முதலில் நெதர்லாந்து அணியை எதிர்கொண்டது. இந்த இரு அணிகளுக்கு இடையேயான முதல்...

ஐபிஎல்: மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் “பவர் ப்ளேயர்” விருதினை வென்ற வாஷிங்டன் சுந்தர் – நெகிழ்ச்சியான பெயர் காரணம் என்ன?

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசனில் ஒவ்வொரு நாளும் சரவெடியான ஆட்டங்கள் அரங்கேறி வருகிறது. அதேபோல் நேற்று நடந்த ஆட்டத்தில் பலம் வாய்ந்த மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. ஆட்டம் முழுவதும் சிக்சர் மழை பொழிந்த நிலையில் ஒரே ஒரு பந்துவீச்சாளர் மட்டும் தனது பந்துவீச்சினால் அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்துள்ளார்....