வியாழக்கிழமை, அக்டோபர் 1, 2020
Home Blog Page 2

பிரஞ்ச் ஓபன் 2020: இரண்டாவது தகுதிச் சுற்றுக்கு முன்னேறிய பிரஜ்ணேஷ் குன்னேஸ்வரன்

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரஞ்ச் ஓபன் தொடரின் தகுதிச் சுற்று ஆட்டங்கள் பாரிஸில் இன்று முதல் தொடங்கியது. எப்பொழுதும் மே மாதத்தில் நடைபெறும் இந்த தொடர் கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இன்று தொடங்கிய ஆட்டங்களில் மூன்று இந்திய வீரர்கள் பங்கேற்றனர். முதலில் விளையாடிய இந்தியாவின் முன்னணி வீரரான பிரஜ்ணேஷ் குன்னேஸ்வரன் டர்க்கியை...

ஐபிஎல்: ‘மை கொவிட் ஹீரோஸ்’ ஜெர்ஸியுடன் களமிறங்கும் கோலியின் ஆர்.சி.பி

2020ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் கடந்த சனிக்கிழமை யுஏஇயில் தொடங்கியது. முதல் போட்டியில் சென்னை அணி மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியுள்ளது. இந்நிலையில் இன்று நடைபெறும் மூன்றாவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சன்ரைசரஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து விளையாடுகிறது. இந்த ஐபிஎல் தொடர் முழுவதும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கொரோனா வைரஸ்...
ராஜஸ்தான் ராயல்ஸ் அனுஜா தல்வி

ஐபிஎல் தொடரில் கலக்கும் ஒரே பெண் பிசியோதெரபிஸ்ட் அனுஜா !

2020ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் யுஏஇயில் நேற்று தொடங்கியது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இம்முறை போட்டிகள் இந்தியாவில் நடைபெறவில்லை. இந்தத் தொடருக்காக ஐபிஎல் அணிகள் மற்றும் வீரர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் யுஏஇ சென்று பயிற்சியை தொடங்கினர்.  கொரோனா காலத்தில் வீரர்களின் நலனில் அனைத்து அணிகளும் தீவிர முன்னேச்சரிக்கை ஏற்பாட்டுடன் உள்ளனர். இந்த...

‘கிரிக்கெட், சினிமா ஆகியவற்றிற்கு கிடைக்கும் ஆதரவு எங்களுக்கு இல்லை’- ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண்

சரியாக 20 ஆண்டுகளுக்கு முன்பாக இதே நாளில் ஒலிம்பிக் மகளிர் பளுத்தூக்குதலில் இந்திய வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரி பதக்கம் வென்றார். அவர் அந்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார். ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரி தான். இந்நிலையில் இந்தச் சாதனையை நினைவு கொள்ளும் விதமாக அவருடன் ‘த...

மாதவிடாய் குறித்த விழிப்புணர்வு – களத்தில் குதித்த ஐபிஎல் அணி

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஐபிஎல் தொடர் கடந்த மே மாதம் நடைபெறமால் ஒத்திவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்தாண்டு ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அமிரகத்தில் நடத்த திட்டமிடப்பட்டது. இந்நிலையில் நாளை முதல் யுஏஇயில் ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் நடப்புச் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடவுள்ளன. இந்த...

இத்தாலியன் ஓபன்: முதல்நிலை ஜோடியை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறிய போபண்ணா இணை

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா பங்கேற்றுள்ளார். இவர் கனடாவின் ஷப்வலோவுடன் இணைந்து விளையாடிகிறார். இந்தத் தொடரில் முதல் போட்டியில் போபண்ணா-ஷப்வலோவ் இணை 6-4,6-4 என்ற கணக்கில் கரின்-பேல்லா ஜோடியை தோற்கடித்தது. இதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் முதல்நிலை ஜோடியான...
செஸ் ராமசந்திரன்

தனது 59ஆவது வயதில் முதல் செஸ் சாம்பியன் பட்டத்தை வென்று சாதித்த முதியவர்

இணையதளத்தில் என்டிசிஏ செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன. இதில் 59 வயதான வி. ராமசந்திரன் பங்கேற்றார். இவர் எரினா கிராண்ட் மாஸ்டர் சிவசுப்ரமணியத்தின் தந்தை. மேலும் இவர் சிவசுப்ரமணியத்திற்கு பயிற்சியாளராகவும் இருந்து வருகிறார்.  இந்நிலையில் தனது 59 வயதில் ராமசந்திரன் என்டிசிஏ செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளார். இந்தத் தொடரில் மொத்தம்...

“கொரோனா காலத்தில் பேட்மிண்டன் போட்டிகள் நடுத்துவது சரியானதா?”-சாய்னா நேவால் கேள்வி

உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பால் விளையாட்டு போட்டிகள் மிகவும் பாதிப்பை சந்தித்தன. தற்போது வைரஸ் பாதிப்பு ஒரு சில நாடுகளில் குறைய தொடங்கியதை அடுத்து மீண்டும் விளையாட்டு போட்டிகள் ஆரம்பிக்கப் பட்டு வருகின்றன. அந்தவகையில் அடுத்த மாதம் சர்வதேச பேட்மிண்டன் போட்டிகள் ஆரம்பமாக உள்ளன. உபர் கோப்பை மற்றும் தாமஸ் கோப்பை தொடர்கள்...

யுஎஸ் ஓபன் 2020: “டென்னிஸை மாற்றப்போகும் வரலாற்று வீராங்கனை நயோமி ஒசாகா” – மகேஷ் பூபதி புகழாராம்

யுஎஸ் ஓபன் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் மகளிர் இறுதிப் போட்டியில் ஜப்பானின் நயோமி ஒசாகா பெலாரஸ் நாட்டின் விக்டோரியா அசரென்காவை எதிர்த்து விளையாடினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் முதல் செட்டை விக்டோரியா அசரென்கா 6-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தினார். அதன்பிற்கு இரண்டாவது செட்டிலும் அசரென்கா 2-0...
ஶ்ரீநிதி எப் சி

முழுவதுமாக இந்திய வீரர்களை களமிறக்க விரும்பும் ஸ்ரீநிதி எப் சி

இந்திய கால்பந்து அமைப்பில் இரண்டாவது நிலை லீக்கான ஐ லீக் தொடரின் 2021-22 சீசனில் புதிதாக களமிறங்க உள்ளது விசாகப்பட்டினத்தை சேர்ந்த ஸ்ரீ நிதி எப் சி கால்பந்து அணி. ஸ்ரீ நிதி குழுமம் ஏற்கனவே ஏ ஐ எப் எப் நடத்தும் யூத் லீக் போட்டிகளில் பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து ஏ...

ஓய்விற்கு பிறகு வெப் சீரிஸ் தயாரிப்பில் இறங்கிய தோனி

லாக்டவுன் காலத்தில் உலகம் முழுவதும் பலரின் பொழுதுபோக்கிற்காக பெரிதும் உதவியது வெப் சீரியஸ்கள் தான். இந்தியர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. தொடர்ந்து பல வெப் சீரியஸ்கள் வெளிவந்து வெற்றியும் அடைந்தது. தற்போது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தானும் புதிதாக ஒரு வெப் சீரியஸினை தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இது அவரது இரண்டாவது தயாரிப்பாகும. கடந்த ஆகஸ்ட் மாதம் இன்டர்நேஷனல்...