TOKYO Olympics start in
:
Days
:
Hrs
:
Min
Sec
Begin typing your search above and press return to search.

அண்மை செய்திகள்

2020 ஒலிம்பிக்: டேபிள் டென்னிஸில் இந்தியா தேர்ச்சி பெறுமா? ஓர் அலசல்!

2020 ஒலிம்பிக்: டேபிள் டென்னிஸில் இந்தியா தேர்ச்சி பெறுமா? ஓர் அலசல்!
X
By

Karthiga Rajendran

Published: 21 Jan 2020 12:11 PM GMT

மணிக்கா பத்ரா, ஷரத் கமல், சத்தியன் ஞானசேகரன் - கடந்த சில ஆண்டுகளாக இந்திய விளையாட்டு உலகை டேபிள் டென்னிஸின் பக்கம் திருப்பிய சாம்பியன்கள் இவர்கள்! 2018 காமன்வெல்த் தொடரில், 3 தங்கம் உள்ப்ட மொத்தம் 8 பதக்கங்களை வென்றது இந்தியா.அப்போது முதலே, டேபிள் டென்னிஸில் பதக்கங்களை எதிர்பார்த்த தொடங்கிவிட்டனர் இந்திய ரசிகர்கள். 2020 ஒலிம்பிக், டேபிள் டென்னிஸில் இந்தியா தேர்ச்சி பெறுமா? ஓர் அலசல்

2018-ம் ஆண்டு இந்திய டேபிள் டென்னிஸுக்கு சாதகமாகவே இருந்தது. ஆனால், அந்த வெற்றி பயணம் அடுத்த ஆண்டு பெரிதாக சோபிக்கவில்லை. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மணிக்காவுக்கு 2019-ம் ஆண்டு சிறப்பாக அமையவில்லை. ஆனால், தமிழகத்தைச் சேர்ந்த சத்தியன் ஞானசேகரனுக்கு சிறப்பாக அமைந்திருந்தது.

மெதுவாக தன்னுடைய விளையாட்டு பயணத்தை மெறுகேற்றிக் கொண்ட சத்தியனுக்கு, உலக டேபிள் டென்னிஸ் தரவரிசையில் நல்ல முன்னேற்றம் இருந்தது. உலக டேபிள் டென்னிஸ் தரவரிசையில் டாப் 25-ல் இடம் பிடித்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார் சத்தியன். டேபிள் டென்னிஸ் உலகக்கோப்பையின் போது டாப் 16-ல் தேர்ச்சி பெற்று சிறந்த டேபிள் டென்னிஸ் வீரராக தன்னை வெளிப்படுத்திக் கொண்டார்.

ஏற்றமும் இறக்கமுமாய் இருக்கும் இந்திய டேபிள் டென்னிஸின் இப்போதைய கனவு - ஒலிம்பிக் 2020-க்கு தேர்ச்சி பெறுவதுதான். ஜனவரி 22-ம் தேதி தொடங்க இருக்கும் 2020 ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் தனிநபர் மற்றும் அணி விளையாட்டுகளில் பங்கேற்க உள்ளனர்.

ஆண்கள், பெண்கள் தனிநபர் பிரிவுகள், ஆண்கள், பெண்கள் இரட்டையர் பிரிவுகள், இரட்டையர்

கலப்பு பிரிவு என ஐந்து பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெற உள்ளன. 2020 ஒலிம்பிக்

டேபிள் டென்னிஸ் போட்டிகளில் விளையாட தேர்ச்சி பெறும் நாடுகளில், ஒவ்வொரு நாட்டில்

இருநதும் மூன்று வீரர், மூன்று வீராங்கனைகளை மட்டுமே அந்த நாடு அனுப்ப வேண்டும்.

இந்தியாவை பொறுத்தவரை, ஆண்கள் இரட்டையர் பிரிவு ஒலிம்பிக் போட்டிக்கு தேர்ச்சி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆனால், பெண்கள் இரட்டையர் பிரிவு போராடியே தேர்ச்சி பெற வேண்டிய சூழ்நிலை உள்ளது.

இரட்டையர் கலப்பு பிரிவை பொறுத்தவரை, சரிசமமான அளவு வாய்ப்புகள் உள்ளன.

ஆசியாவில் இருந்து தேர்ச்சி பெறும் மற்ற அணிகளான தென் கொரியா, தாய்லாந்து,

சிங்கப்பூர் ஆகிய அணிகளுடன் இந்தியாவுக்கு கடும் போட்டி நிலவுகிறது.

தனி நபர் பிரிவுகளில், மணிக்கா பத்ராவுக்கும் கடினமான சவாலை கடந்து தேர்ச்சி பெற வேண்டி உள்ளது. ஆண்கள் பிரிவில் சத்தியன், ஷர்த் கமல் ஆகியோர் தேர்ச்சி பெற அதிக வாய்ப்பு உள்ளது.

இந்திய அணி

ஆண்கள் - சத்தியன் ஞானசேகரன், ஷரத் கமல், விகாஸ் தக்கர், ஹர்மீத் தேசாய்,

ஆண்டனி அமல்ராஜ்

பெண்கள் - மணிக்கா பத்ரா, சுதிர்தா முகர்ஜி, அய்ஹிகா முகர்ஜி, மாதுரிக்கா பட்கர், அர்ச்சனா கிரீஷ் காமத்

தகுதிச் சுற்று போட்டிகள்

ஆண்கள் இரட்டையர் பிரிவு - இந்தியா vs லக்சம்பர்க் - ஜனவரி 22 - இரவு 10.30 மணிக்கு

பெண்கள் இரட்டையர் பிரிவு - இந்தியா vs ஸ்வீடன் - ஜனவரி 23 – நள்ளிரவு 12.30 மணிக்கு

Next Story
Share it