TOKYO Olympics start in
:
Days
:
Hrs
:
Min
Sec
Begin typing your search above and press return to search.

அண்மை செய்திகள்

மகளிர் ஐபிஎல் தொடரில் கலக்க காத்திருக்கும் இந்திய வீராங்கனைகள்!

மகளிர் ஐபிஎல் தொடரில் கலக்க காத்திருக்கும் இந்திய வீராங்கனைகள்!
X
By

Ashok M

Published: 2 Nov 2020 2:55 AM GMT

ஆடவர் ஐபிஎல் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதனால் அதில் அதிக பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் 4ஆம் தேதி முதல் மகளிர் டி20 சேலஞ்ச் (மகளிர் ஐபிஎல்) தொடர் நடைபெற்ற உள்ளது. இதில் சூப்பர்நோவாஸ்,டிரையல்பிளாஸ்டர்ஸ், வேலோசிட்டி ஆகிய மூன்று அணிகள் பங்கேற்க உள்ளன. இந்தத் தொடரில் சாதிக்க காத்திருக்கும் இந்திய வீராங்கனைகள் யார்? யார்?

ஷபாலி வர்மா:

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 16வயது வீராங்கனை ஷபாலி வர்மா. இவர் இந்தாண்டு நடைபெற்ற மகளிர் டி20 உலகக் கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அத்துடன் இந்திய அணியின் தொடக்க வீராங்கனையாக களம் கண்டு அசத்தினார். இந்தத் தொடரில் 163 ரன்களை 158.25 ரன்விகிதத்துடன் அடித்து அதிரவைத்தார். இந்த ஃபார்மை அவர் தற்போது நடைபெற உள்ள மகளிர் டி20 தொடரிலும் காட்டி அசத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பூனம் யாதவ்:

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர் பூனம் யாதவ். இவர் கடந்த டி20 உலகக் கோப்பையில் 10 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். அத்துடன் தான் களமிறங்கிய அனைத்து போட்டிகளிலும் விக்கெட் வீழ்த்தினார். ஆட்டத்தின் போக்கை மாற்ற கேப்டனுக்கு முக்கிய துருப்புச் சீட்டாக பூனம் யாதவ் அமைவார் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்துமில்லை. இரண்டு முறை சாம்பியன் அணியான சூப்பர் நோவாஸிற்கு பெரும் பலமாக பூனம் யாதவ் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்மிருதி மந்தானா:

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் அனுபவம் வாய்ந்த தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தானா. இவர் இந்திய மகளிர் அணி சார்பில் 75 டி20 போட்டிகளில் விளையாடி 12 அரைசதங்களுடன் 1716 ரன்களை சேர்த்துள்ளார். அத்துடன் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளிக்கும் முக்கியமான வீராங்கனையாக மந்தானா இருந்து வருகிறார். மகளிர் ஐபிஎல் தொடரில் ட்ரெயில்பிளைசர்ஸ் அணியின் கேப்டனாக மந்தானா களமிறங்க உள்ளார். இதனால் இவர் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தீப்தி சர்மா:

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் வீராங்கனை தீப்தி சர்மா. இவரின் இடது கை பேட்டிங் மற்றும் ஆஃப் ஸ்பின் பந்துவீச்சு அணிக்கு எப்போதும் கூடுதல் பலம். கடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் 116 ரன்கள் மற்றும் 4 விக்கெட் ஆகியவற்றை எடுத்து தீப்தி சர்மா நல்ல ஃபார்மில் இருந்தார். இந்த ஃபார்மை அவர் மகளிர் ஐபிஎல் தொடரிலும் காட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹர்மன்பிரீத் கவுர்:

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர். இவர் கடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக சாதிக்கவில்லை. அந்தத் தொடரில் இந்திய மகளிர் அணி தோல்வி அடைந்ததற்கு இவரின் மோசமான ஃபார்மும் ஒரு காரணம். அந்தத் தோல்வியை பின்னுக்கு தள்ளி மீண்டும் ஃபார்மிற்கு வர ஹர்மன்பிரீத் கவுர் மகளிர் ஐபிஎல் தொடரில் முயற்சி செய்வார். டி20 வரலாற்றில் சதம் அடித்த முதல் இந்திய வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர் தான். அத்துடன் இந்தியாவின் அனுபவம் வாய்ந்த டி20 வீராங்கனையும் இவர் தான். எனவே நடப்புச் சாம்பியன் அணியான சூப்பர்நோவாஸின் கேப்டனாக இவர் அசத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: ‘ஹர்பஜன்-ஶ்ரீசாந்த் டூ கோலி-சூர்யா’ – களத்தில் வலுத்த இந்திய வீரர்களின் மோதல்!

Next Story
Share it