அண்மை செய்திகள்
மகளிர் டி20 உலகக் கோப்பை: சாதிக்க காத்திருக்கும் இந்திய வீராங்கனைகள் !

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இம்முறை ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டிகள் வரும் பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி தொடங்கி மார்ச் மாதம் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இதில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்க உள்ளன. இவை அனைத்தும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதில் இந்திய மகளிர் அணி, பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணி, நியூசிலாந்து அணி உள்ளிட்ட அணிகள் இருக்கும் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
மேலும் ஆசிய சாம்பியனான பங்களாதேஷ் அணியும் இதே பிரிவில் இடம்பெற்றுள்ளதால் நாக் அவுட் சுற்றுக்கு செல்ல இந்திய மகளிர் அணி கடுமையாக போராட வேண்டி இருக்கும். இந்நிலையில் இந்தத் தொடருக்கான இந்தியா மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மகளிர் அணி விவரம்:
ஹர்மன்பிரீத்
கவுர்(கேப்டன்),
ஸ்மிருதி
மந்தனா,
ஷபாலி
வர்மா,
ஜெமிமா
ரோட்ரிக்ஸ்,
ஹர்லீன்
தியோல்,
தீப்தி
சர்மா,
வேதா
கிருஷ்ணமூர்த்தி,
ரிச்சா
கோஷ்,
தானியா
பாட்டியா,
பூனம்
யாதவ்,
ராதா
யாதவ்,
ராஜேஸ்வரி
கெய்க்வாட்,
ஷிகா
பாண்டே,
பூஜா
வஸ்த்ராக்கர்,
அருந்ததி
ரெட்டி
ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில்
இந்தத் உலகக் கோப்பை தொடரில்
சிறப்பாக ஜோலிக்க காத்திருக்கும்
வீராங்கனைகள் யார் யார்?
ஷபாலி
வர்மா:
இந்திய மகளிர் அணியில் புதிதாக இடம்பெற்றுள்ள இளம் சிறுமி தான் ஷபாலி வர்மா. இவர் தற்போது வரை இந்தியாவிற்காக 9 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். இவ்வளவு சிறிய நேரத்தில் இவர் மீது வெளிச்சம் பட முக்கிய காரணமாக இருந்தது அவர் படைத்த சமீபத்திய சாதனை தான். இவர் வெஸ்ட் இண்டீஸ் மகளீர் அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 போட்டியில் அரைசதம் கடந்ததன் மூலம் ஒரு புதிய சாதனையை படைத்தார். அதாவது மிகவும் குறைந்த வயதில் அரைசதம் கடந்த இந்தியர் என்பது தான் அது. இவர் சச்சின் டெண்டுல்கரின் நீண்ட நாள் சாதனையை முறியடித்ததே இவர் மீது வெளிச்சம் பட முக்கிய காரணம். எனவே இவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய மகளீர் அணி உலகக் கோப்பையை வெல்ல உறுதுணையாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்மிருதி
மந்தனா:
இந்திய மகளிர் அணியின் முக்கிய தொடக்க ஆட்ட வீராங்கனையாக வலம் வருபவர் ஸ்மிருதி மந்தனா. இவருடைய அனுபவ விளையாட்டு இந்திய மகளிர் அணிக்கு மிகவும் முக்கியமானதாக அமையும். அத்துடன் இவர் 2018ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பிக்பாஷ் கோப்பையில் பங்கேற்று விளையாடிய அனுபவமும் இம்முறை கைக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல இந்திய மகளிர் அணியில் மந்தனா-ஷபாலி வர்மா ஜோடியின் தொடக்க ஆட்டம் சிறப்பாக அமையும் என்று கருதப்படுகிறது.
ஹர்மன்பிரீத்
கவுர்:
இந்திய மகளிர் அணியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த கூடிய வீராங்கனை தான் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர். இவர் 2017ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை போட்டியில் அடித்த 171 ரன்கள் அடித்து மிரட்டினார். அப்போது முதல் மகளிர் கிரிக்கெட்டில் பந்துவீச்சாளர்களுக்கு இவர் மிகவும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறார். அத்துடன் இந்தியா சார்பில் 100 டி20 போட்டிகளில் பங்கேற்ற ஒரே வீராங்கனை இவர் தான். ஆகவே அனுபவம் நிறைந்த ஹர்மன்பிரீத் கவுர் இந்தத் தொடரில் அணியை சிறப்பாக வழி நடத்து கோப்பையை வெல்லுவார் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்து உள்ளனர்.
பூனம்
யாதவ்:
இந்திய மகளிர் அணியில் மிகவும் அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளராக வலம் வருபவர் பூனம் யாதவ். இவர் இந்திய அணிக்காக 62 டி20 போட்டிகளில் களமிறங்கி 85 விக்கெட்களை எடுத்துள்ளார். ஆஸ்திரேலியாவிலிருக்கும் ஆடுகளங்கள் பெரிதாக இருக்கும் என்பதால் இவரின் சுழற்பந்து வீச்சை எளிதில் சிக்சர் வீராங்கனைகள் திணறுவார்கள். இதனால் இவருக்கு விக்கெட் அதிகம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
ஷிகா
பாண்டே:
இந்திய மகளிர் அணியின் வேகப்பந்து வீச்சை நீண்ட நாட்கள் தாங்கி நிறுத்தியவர் ஜுலன் கோசாமி. அவரின் ஓய்விற்கு பிறகு ஷிகா பாண்டே அந்த இடத்தை நிரப்ப முயற்சி செய்து வருகிறார். இவர் வீசும் யார்க்கர் பந்துகள் ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் மிகவும் உதவியாக இருக்கும். ஆகவே இவரும் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து செல்லும் முனைப்பில் உள்ளார்.