அண்மை செய்திகள்
ஃபிஃபா யு-17 மகளிர் உலகக்கோப்பை: இந்திய அணிக்கான பயிற்சி முகாம் கோவாவில் நடக்கிறது
இந்தியாவில் முதன் முதலாக அடுத்த வருடம் நடக்கவிருக்கும் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் உலகக்கோப்பைக்கான பயிற்சி முகாம் கோவாவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2020ல் நடக்கவிருக்கும் 16 வயதுக்கு உட்பட்டோருக்கான ஏ ஃஎப் சி சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியும் இந்த பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலின் காரணமாக உலகெங்கும் விளையாட்டு போட்டிகளும் தடைபட்டிருந்தன. விளையாட்டு வீரர்களும் பயிற்சி செய்ய முடியாமல் முடங்கியிருந்தனர். இப்போது சிறிது சிறிதாக பயிற்சிகள் தொடங்கவிருக்கிறது.
உலகக்கோப்பையில் இந்திய அணி சிறப்பாக விளையாட வேண்டும் என்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கவனமாக செய்து வருகின்றனர் ஏ ஐ ஃஎப் ஃஎப் அமைப்பினர். வீரர்கள் பயிற்சி செய்வதற்காக கட்டுபாடுகள் சிறிது தளர்வாக உள்ள கோவாவினை தேர்ந்தெடுத்துள்ளனர்.கோவாவிற்கு வரும் அனைத்து வீரர்களுக்கும் கோவிட் பரிசோதனை நடத்தப்பட்டு, முடிவு நெகட்டிவ் என வரும் வீரர்கள் மட்டுமே பயிற்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த அணியில் தமிழகத்தில் இருந்து ஓரே வீரராக இடம்பெற்றுள்ளார் மாரியம்மாள். சங்ககிரியை சேர்ந்த இவர் முன்கள வீராவார். உலகக்கோப்பையில் சிறப்பாக செயல்பட்டு தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என வாழ்ந்துவோம்.
மற்றொரு செய்தியாக இந்திய 17 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் அணியின் பயிற்சியாளரான தாமஸ் டென்னர்பி, கொரோனா காரணமாக தனது சொந்த நாடான ஸ்விடனில் இருப்பதால் இந்த பயிற்சி முகாமில் அவர் கலந்து கொள்ள முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.