TOKYO Olympics start in
:
Days
:
Hrs
:
Min
Sec
Begin typing your search above and press return to search.

அண்மை செய்திகள்

விராட் கோலியை மன அழுத்ததிற்கு தள்ளிய கிரிக்கெட் தொடர்

விராட் கோலியை மன அழுத்ததிற்கு தள்ளிய கிரிக்கெட் தொடர்
X
By

Amaran

Published: 20 Feb 2021 12:56 PM GMT

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மெனாகவும் விராட் கோலி திகழ்ந்து வருகிறார். கிரிக்கெட் உலகில் இவர் பல சாதனைகள் படைத்துள்ளார் . ஆனால் "யானைக்கும் அடிசருக்கும்" என்ற பழமொழியின் அடிப்படையில் இவரை மிகவும் மன அழுத்தத்துக்கு உள்ளாக்கியது ஒரு டெஸ்ட் தொடர். அப்படி அந்த டெஸ்ட் தொடரில் நடந்தது என்ன?

2014-ஆம் ஆண்டு இங்கிலாந்திற்கு இந்தியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் செய்தது. அப்பொழுது ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. அதில் (3-1) என்ற கணக்கில் இங்கிலாந்திடம் இந்தியா படு தோல்வி அடைந்தது. இத்தொடரில் விராட் கோலியின் ஆட்டம் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதற்கு காரணம் 10 இன்னிங்ஸில் வெறும் 114 ரன்கள் மற்றுமே அவர் எடுத்திருந்தார். இங்கிலாந்தின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சனிடம் 4 முறை ஆட்டமிழந்தார்.

இந்த மோசமான ஆட்டத்தின் மூலம் இவர் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார். இந்த மன அழுத்தம் இவரை தனிமையின் பக்கம் இழுத்துச் சென்றிருக்கிறது. எனக்கு இரவில் தூக்கம் வரவில்லை, காலையில் எழவும் எனக்கு விருப்பமில்லை என்று ஒரு பேட்டியின் போது கூறினார்.

சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர் போன்ற ஜாம்பவான்களின் சாதனையை முறியடித்தவர் விராட் கோலி. ஆனால் ஒரு சுமாரான டெஸ்ட் தொடர் இவரின் தனிப்பட்ட வாழ்க்கையை பாதிப்பது ஆச்சரியமளிக்கிறது.

மேலும் படிக்க: ஆஸ்திரேலியன் ஓபனில் நம்பர் ஒன் வீரரை தோற்கடித்த தமிழரின் கதை!

Next Story
Share it