TOKYO Olympics start in
:
Days
:
Hrs
:
Min
Sec
Begin typing your search above and press return to search.

அண்மை செய்திகள்

ஹீரோ ஐ லீக் கால்பந்து தொடரில் இணையும் இரண்டு புதிய அணிகள்

ஹீரோ ஐ லீக் கால்பந்து தொடரில் இணையும் இரண்டு புதிய அணிகள்
X
By

Ajanth Selvaraj

Published: 13 Aug 2020 2:30 PM GMT

அடுத்த வருடம் நடக்கவிருக்கும் ஐ லீக் கால்பந்து தொடரில் டெல்லியை சேர்ந்த சுதேவா எப் சி அணி புதியதாக இணைந்து விளையாடும் என இந்தியா கால்பந்து சம்மேளனமான ஏ ஐ எப் எப் அறிவித்துள்ளது. இதன்மூலம் டெல்லியில் இருந்து ஐ லீக் தொடரில் பங்கேற்கும் முதல் அணி என்ற பெருமையை சுதேவா எப் சி அணி பெற்றுள்ளது. மேலும் 2021-22 ஆம் ஆண்டில் நடக்கவிருக்கும் தொடரில் மற்றொரு புதிய அணியாக விசாகப்பட்டினத்தை சேர்ந்த ஶ்ரீநிதி எப் சி பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விரு அணிகளும் கார்ப்பரேட் விதிமுறைகள் மூலமாக இத்தொடரில் இணைந்துள்ளதால் ஒரு வருடத்திற்கு ரிலகேசன் முறையில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

[embed]https://twitter.com/IndianFootball/status/1293529533228826625[/embed]

இதற்காக விண்ணப்பித்த மற்றொரு அணியான ஷில்லாங்கினை சேர்ந்த ரய்நித் அணிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஏ ஐ எப் எப் வெளியிட்ட அறிக்கையில், "ஜூலை 31 அன்று அனைத்து அணிகளும் சமர்பித்த டாக்குமென்ட்டுகளை தீர்வாக ஆராய்ந்த பின்னர், வருகின்ற ஹீரோ ஐ லீக் 2020-21 தொடரில் விளையாட சுதேவா எப் சி அணிக்கு விளையாட வாய்ப்பளிக்கப்படுகிறது."

ஶ்ரீநிதி எப் சி ஶ்ரீநிதி எப் சி

"மேலும் 2021-22 ஹீரோ ஐ லீக் தொடரில் விளையாட ஶ்ரீநிதி எப் சி அணிக்கு விளையாட அனுமதிக்கப்பட்டுள்ளது " எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு அணிகளுக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ள ஏ ஐ எப் எப்இன் குஷால் தாஸ், இதன்மூலம் நாட்டில் கால்பந்து பல இடங்களில் விளையாடப்படும் எனவும், கால்பந்து விளையாட்டு இந்தியாவில் மேலும் வளர உதவியாக இருக்கும் எனவும் கூறியுள்ளார்.

Next Story
Share it