TOKYO Olympics start in
:
Days
:
Hrs
:
Min
Sec
Begin typing your search above and press return to search.

அண்மை செய்திகள்

சீனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் - அடுத்த சுற்றுக்கு முன்னேறிய தமிழக வீரர்கள்

சீனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் - அடுத்த சுற்றுக்கு முன்னேறிய தமிழக வீரர்கள்
X
By

Karthiga Rajendran

Published: 11 Feb 2020 10:25 AM GMT

77வது சீனியர் தேசிய ஸ்குவாஷ்

சாம்பியன்ஷிப் போட்டிகள் சென்னையில் தொடங்கியுள்ளன. பிப்ரவரி 9-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை போட்டிகள் நடைபெற உள்ளன.

தகுதிச்சுற்று போட்டிகளில், தமிழகத்தின்

தீபக் மிஷ்ரா 11-4, 11-4, 11-5 என்ற கேம் கணக்கில் மகாராஷ்டிராவின் திவிட் பூஜாரியை

வென்றார். இதே போல மற்றொரு போட்டியில், தமிழக வீரர் முருகேஷ் மணி, டெல்லியின்

சுமித் குமாரை வென்றார்.

2011-ம் ஆண்டுக்கு பிறகு, சரியாக 9 ஆண்டுகளுக்கு

பிறகு தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் சென்னையில் நடைபெறுகிறது. ஸ்குவாஷ் விளையாடும்

நாடுகளின் அந்தந்த ஊர்களிலேயே தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்தலாம் என சர்வதேச

ஸ்குவாஷ் அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், 9 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் தேசிய ஸ்குவாஷ்

சாம்பியன்ஷிப் நடைபெறுவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த சாம்பியன்ஷிப்பில் விளையாடும் வீரர் வீராங்கனைகளில்

சிறப்பானவர்களை ஆசிய குழு சாம்பியன்ஷிப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். ஆசிய

குழு ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப், கோலாலம்பூரில்

வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ளது

முன்னணி வீரர் வீராங்கனைகளாக ஜோஷ்னா சின்னப்பா, செளரவ் கோஷல் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இந்தியன் ஸ்குவாஷ்

அகாடெமியின் எட்டு கோர்டுகளிலும் போட்டிகள் நடைபெறுகின்றன

Next Story
Share it