அண்மை செய்திகள்
டோக்கியோ ஒலிம்பிக்ஸ் டேபிள் டென்னிஸ் தகுதி தொடர்: இந்திய ஆடவர் அணி தோல்வி
டோக்கியோ
ஒலிம்பிக்கில் டேபிள் டென்னிஸ்
போட்டியில் பங்கேற்பதற்கான
தகுதிச் சுற்றுப் போட்டிகள்
போர்சுகல் நாட்டில் நடைபெற்று
வருகின்றன.
இதில்
இந்திய மகளீர் அணி காலிறுதிக்கு
முந்தைய சுற்றில் 2-3
என்ற
கணக்கில் ரூமேனியா அணியிடம்
தோல்வி அடைந்தது.
இதனால்
ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி
பெறும் வாய்ப்பை இழந்தது.
இந்நிலையில்
ஆடவர் பிரிவில் இந்திய அணி
முதல் சுற்றில் பை கிடைத்ததால்
இரண்டாவது சுற்றில் லக்சம்பர்அணியை
3-0
என்ற
கணக்கில் வீழ்த்தியது.
இதனைத்
தொடர்ந்து காலிறுதிக்கு
முந்தைய சுற்றில் ஸ்லோவேனியா
அணியை எதிர்த்து இந்திய அணி
இன்று விளையாடியது.
இதில்
முதல் போட்டியில் சரத் கமல்
மற்றும் ஹர்மித் தேசாய் இணை
ஸ்லோவேனியாவின் டெனி மற்றும்
போஜன் ஜோடியை எதிர்கொண்டது.
இந்தப்
போட்டியில் ஆரம்பம் முதல்
ஆதிக்க செலுத்திய இந்திய
வீரர்கள் 11-9,11-7,11-5
என்ற
கணக்கில் எளிதில் வெற்றிப்
பெற்றனர்.
இதனைத்
தொடர்ந்து இந்தியாவின்
நட்சத்திர வீரர் சத்தியன்
ஸ்லோவேனியாவின் ஜோர்கிக்
டர்கோவை எதிர்த்து விளையாடினார்.
இந்தப்
போட்டியில் முதல் கேம்மை
9-11
என்ற
கணக்கில் சத்தியன் இழந்தார்.
பின்னர்
இரண்டாவது கேம்மில் சுதாரித்து
கொண்டு ஆடிய சத்தியன் 10-10
என்ற
சமன் செய்தார்.
எனினும்
அந்த கேம்மை 10-12என்ற
புள்ளிகளில் சத்தியன் இழந்தார்.
மூன்றாவது
கேம்மில் சிறப்பாக விளையாடிய
டர்கோ 11-3
என்ற
புள்ளிகளின் அடிப்படையில்
கேம்மை கைப்பற்றி ஆட்டத்தில்
வெற்றிப் பெற்றார்.
இதனால்
இந்திய அணியும் ஸ்லோவேனியா
அணியும் தலா 1
வெற்றிப்
பெற்று 1-1
என்ற
சமநிலையில் இருந்தனர்.
பின்னர்
நடைபெற்ற மூன்றாவது போட்டியில்
ஹர்மித் தேசாய் ஸ்லோவேனியாவின்
போஜனை எதிர்கொண்டார்.
இந்தப்
போட்டியில் முதல் கேம்மை
11-5
என்ற
கணக்கில் ஹர்மித் தேசாய்
வெற்றிப் பெற்றார்.
இரண்டாவது
கேம்மில் இரு வீரர்களும்
மாறி புள்ளிகளை எடுத்தனர்.
எனினும்
அந்த கேம்மை போஜன் 12-10
என்ற
கணக்கில் வென்றார்.
அடுத்த
கேம்மை ஹர்மித் 11-6
என
வெல்ல ஆட்டத்தில் சூடுபிடிக்க
தொடங்கியது.
நான்காவது
கேம்மில் போஜன் தனது சிறப்பான
ஆட்டத்தை வெளிப்படுத்தி 11-5
என
வென்றார்.
இரு
வீரர்களும் தலா 2
கேம்களை
வென்று இருந்ததால்,
வெற்றியாளரை
தீர்மானிக்க இரு வீரர்களும்
ஐந்தாவது கேம் விளையாடினர்.
இதில்
சிறப்பாக விளையாடிய போஜன்
11-6
என்ற
கணக்கில் கேம்மை வென்று 3-2
என்ற
வித்தியாசத்தில் போட்டியை
வென்றார்.
இதன்மூலம்
இந்தச் சுற்றில் ஸ்லோவேனியா
அணி 2-1
என்ற
கணக்கில் முன்னிலை பெற்றது.
இந்தப் போட்டியை தொடர்ந்து இந்திய அணியின் அனுபவ வீரர் சரத் கமல் டர்கோவை எதிர்கொண்டார். இதில் சிறப்பாக விளையாடிய டர்கோ 10-12,11-7,12-10,11-8 என்ற கணக்கில் சரத் கமலை தோற்கடித்தார். இதன்மூலம் ஸ்லோவேனியா அணியிடம் 3-1 என்ற கணக்கில் தோல்வி அடைந்து இந்திய ஆடவர் அணி டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிப் பெறும் வாய்ப்பை இழந்தது.