அண்மை செய்திகள்
"நெருக்கடியான சூழ்நிலையை கையாள்வதே இந்த உலகக் கோப்பை தொடரின் முக்கியமான சவால்"- கேப்டன் ஹர்மன்பிரீத்

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க உள்ளது. இதற்காக இந்திய அணி வீராங்கனைகள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதற்கு முன்பாக இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியா,இங்கிலாந்து அணிகளுடன் முத்தரப்பு தொடரில் விளையாட உள்ளது.
இந்தத் தொடரும் வரும் 31ஆம் தேதி தொடங்க உள்ளது. அதில் பங்கேற்கவும் உலகக் கோப்பையில் தொடரில் விளையாடவும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இன்று ஆஸ்திரேலியா புறப்பட்டது. இந்திய அணி புறப்படுவதற்கு முன்பாக இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது,
“கடந்த
இரண்டு உலகக் கோப்பை தொடர்களிலும்
நாங்கள் கிட்டதட்ட கோப்பையை
வெல்லும் நிலைக்கு சென்றோம்.
எனினும்
கோப்பையை வெல்ல முடியவில்லை.
அதற்கு
காரணம் நெருக்கடியான சூழ்நிலையை
சிறப்பாக நாங்கள் கையாளாதது
தான்.
ஆகவே
இம்முறை நாங்கள் அதனை கவனத்தில்
கொள்ள வேண்டும்.
நெருக்கடியான
சூழ்நிலையை கையாள்வதே இந்த
உலகக் கோப்பையில் எங்களுக்கான
முக்கிய சவாலாக இருக்கும்.
எனவே
நாங்கள் இம்முறை ஒரு பெரிய
தொடரில் விளையாடுகிறோம்
என்று நினைக்காமல் எங்களுடைய
ஆட்டத் திறனில் அதிக கவனம்
செலுத்த உள்ளோம்.
ஒரு
அணியாக நாங்கள் அனைவரும்
வெற்றிக்காக விளையாட வேண்டும்.
அவ்வாறு
நாங்கள் விளையாடினால் எங்களுக்கு
வெற்றி நிச்சயமாக கிடைக்கும்.
இந்த
உலகக் கோப்பை தொடரில் சுழற்பந்து
வீச்சாளர்கள் எங்கள் அணிக்கு
முக்கியமானவர்களாக இருப்பார்கள்.
ஏனென்றால்
பல நேரங்களில் அவர்கள் தான்
தேவையான விக்கெட்டை எடுத்து
தருகின்றனர்.
அதேபோல
ஆஸ்திரேலியாவிலும் அவர்கள்
சிறப்பாக செயல்படுவார்கள்
என்று நான் நம்புகிறேன்.
அணியின்
தொடக்க வீராங்கனைகளான மந்தானா
மற்றும் ஷாபாலி சிறப்பாக
விளையாடி வருகின்றனர்.
டி20
போட்டிகளை
பொறுத்தவரை முதல் 6
ஓவர்கள்
மிகவும் முக்கியமான ஒன்று.
அதில்
அணிக்கு நல்ல துவக்கம் கிடைத்து
விட்டால் அணி நன்றாக விளையாடி
விடும்.
அணியில்
உள்ள இளம் வீராங்கனைகளுக்கு
நான் கூற விரும்புவது ஒன்று
தான்.
அதாவது
நீங்கள் எதை பற்றியும் கவலை
படாமல் உங்களின் ஆட்டத்தில்
கவனத்தை செலுத்துங்கள்.
அப்போது
தான் உங்களால் 100
சதவிகிதத்தையும்
தர முடியும்.
உலகக்
கோப்பை தொடருக்கு முன்னால்
முத்தரப்பு தொடர் உள்ளதால்
அதில் இளம் வீராங்கனைகள்
எவ்வாறு விளையாடுகின்றனர்
என்று பார்ப்பதற்கு ஒரு
வாய்ப்பு கிடைத்துள்ளது.
என்னுடைய
ஆட்டத்தை பொறுத்தவரை நான்
மிகவும் உறுதியாக இருக்கிறேன்.
எப்போதும்
உங்களால் சிறப்பாக விளையாட
முடியாது.
சில
நேரங்களில் நீங்கள் ஃபார்ம்
இல்லாமலும் இருப்பீர்கள்.
அதை
ஏற்றுக் கொண்டு தான் ஆகவேண்டும்.
எனினும்
இம்முறை நான் சிறப்பாக
விளையாடுவேன் என்ற நம்பிக்கை
எனக்கு இருக்கிறது” எனத்
தெரிவித்தார்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 2017ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பையில் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தது. அதன்பின்னர் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தது. அப்போது செய்த தவறுகளை திருத்தி இம்முறை இந்திய மகளிர் அணி சாம்பியன் பட்டத்தை வெல்லுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். இந்திய மகளிர் அணி பிப்ரவரி 21ஆம் நடைபெறும் முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது.