அண்மை செய்திகள்
கேரளாவில் விளையாட்டு கோட்டாவின் அடிப்படையில் 195 வீரர்களுக்கு அரசு துறையில் வேலை

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வந்த அறிக்கையின்படி, கேரள அரசாங்கம் விளையாட்டு கோட்டாவின் அடிப்படையில் 195 விளையாட்டு விரர்களுக்கு அரசு வேலை வழங்குகிறது. இவர்களுக்கான அராசாணையை வருகிற பிப்ரவரி 20 அன்று திருவனந்தபுரத்தில் உள்ள சென்ட்ரல் ஸ்டேடியத்தில் நடக்கும் விழாவில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள் வழங்குகிறார். தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரும் யுடிஃஎப் அரசாங்கம் 2010-14 ஆண்டுகளில் ஆட்சியில் இருந்தபொழுது விளையாட்டு கோட்டாவின் அடைப்படையில் தேர்வு செய்யப்பட்டது குறிப்படதக்கது.
ஒவ்வொரு ஆண்டும் 50 வீரர்கள் விளையாட்டு கோட்டாவின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவ்வாறு 2010-2014 ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களில் சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள்ளதால் இப்பொழுது கடைசி கணக்காக 195 வீரர்கள் உள்ளனர். நமது நாட்டில் பலரும் விளையாட்டினை தேர்ந்தெடுக்க தயங்குவது அதன் மூலம் வேலைவாய்ப்புகள் சரியாக கிடைக்காததால் தான். சில நேரங்களில் வெளிநாட்டு தரம் வாய்ந்த போட்டிகளில் பதக்கம் வென்றிருந்தாலும் வீரர்களுக்கு எந்த உதவியும் கிடைக்காதது மிகவும் வருத்தமளிக்கும் விஷயமாகும்.
கேரள அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு ஒரு புதிய தொடக்கமாகவும் பலருக்கும் நம்பிக்கை அளிக்கும் செயலாகவும் இருக்கும் என நம்புவோம்.