TOKYO Olympics start in
:
Days
:
Hrs
:
Min
Sec
Begin typing your search above and press return to search.

அண்மை செய்திகள்

2020 பி.பி.எல் - சிந்துவுக்கு முதல் தோல்வி... போராடி வென்ற ஹைதராபாத்

2020 பி.பி.எல் - சிந்துவுக்கு முதல் தோல்வி... போராடி வென்ற ஹைதராபாத்
X
By

Karthiga Rajendran

Published: 29 Jan 2020 6:38 PM GMT

2020 பிரீமியர் பேட்மிண்டன் லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. சென்னை,

லக்னோவை அடுத்து ஹைதராபாத்தில் உள்ள ஜி.எம்.சி பாலயோகி உள்விளையாட்டு அரங்கத்தில்

போட்டிகள் நடக்கின்றன.

இன்றைய டையில், ஹைதராபாத் ஹண்டர்ஸ் - நார்த் ஈஸ்டர்ன் வாரியர்ஸ் அணிகள் மோதின.

முதலில் தொடங்கிய கலப்பு இரட்டையர் போட்டியில், ஹைதராபாத்தின் இவானாவ் - என்.எஸ்

ரெட்டி இணை, நார்த் ஈஸ்டர்ன் வாரியர்ஸின் கரகா - கே.எச் நா இணையை எதிர்கொண்டது.

இந்த போட்டியில், 15-12, 8-15, 15-12 என்ற செட் கணக்கில் ஹைதராபாத் அணி போட்டியை

வென்றது

அடுத்து நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில், நார்த் ஈஸ்டர்ன் வாரியர்ஸின் சென்சொம்பூன்சக் போராடி வென்றார். சவுரப் வெர்மாவுக்கு எதிரான இந்த போட்டியில் 14-15, 14-15 என்ற செட் கணக்கில் போட்டியை வென்றார்.

பி.வி சிந்து அதிர்ச்சி தோல்வி

பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில், பி.வி சிந்து - மிச்சல் லீ மோதினர். பேட்மிண்டன் தரவரிசையில் 10-வது இடத்தில் இருக்கும் கனடாவின் மிச்சல் லீ சிந்துவை தோற்கடித்தார். தொடக்கம் முதலே அதிக புள்ளிகள் பெற்று வந்த லீ, 8-15, 9-15 என நேர் செட் கணக்கில் சிந்துவை தோற்கடித்தார். இதனால் மூன்று போட்டிகளின் முடிவில் 0-2 என நார்த் ஈஸ்டர் வாரியர்ஸ் முன்னிலை பெற்றது.

மிச்சல் லீ

அடுத்து நடைபெற்ற ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு போட்டியில், ஹைதராபாத்தின் லேன் - இவானோ இணை, நார்த் ஈஸ்டர்ன் வாரியர்ஸின் இசாரா - டே இணையை 15-7, 15-10 என்ற செட் கணக்கில் வென்றது. இந்த போட்டி நார்த் ஈஸ்டர்ன் வாரியர்ஸுக்கு டிரம்ப் கேம் என்பதால், போட்டி தலைகீழானது. 0 புள்ளிகளில் இருந்த ஹைதராபாத்துக்கு 1 புள்ளி கிடைத்தது. டிரம்ப் கேமை இழந்ததால், நார்த் ஈஸ்டர்ன் அணிக்கு 2 புள்ளிகளில் இருந்து 1 புள்ளி குறைக்கப்பட்டது. இதனால், 1-1 என இரு அணிகளும் சமநிலைக்கு வந்தன.

கடைசி போட்டியான மற்றுமொரு ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டி விறுவிறுப்பாக

தொடங்கியது. ஹைதரபாத்தின் லியூ - நார்த் ஈஸ்டர்ன் வாரியர்ஸின் இயூவை 15-9, 15-10

என்ற செட் கணக்கில் தோற்கடித்தார்.

இதனால், ஐந்து போட்டிகளின் முடிவில் 2-1 என்ற புள்ளிக்கணக்கில் ஹைதரபாத் அணி வெற்றி பெற்றது. அடுத்து நடக்க இருக்கும் டையில், பூனே 7 ஏஸஸ் - சென்னை சூப்பர்ஸ்டார்ஸ் அணிகள் மோத உள்ளனர்.

Next Story
Share it