TOKYO Olympics start in
:
Days
:
Hrs
:
Min
Sec
Begin typing your search above and press return to search.

அண்மை செய்திகள்

பி.பி.எல் - நம்பர் 2 வீராங்கனை தா சு யிங்கிடம் சிந்து தோல்வி!

பி.பி.எல் - நம்பர் 2 வீராங்கனை தா சு யிங்கிடம் சிந்து தோல்வி!
X
By

Karthiga Rajendran

Published: 31 Jan 2020 6:29 PM GMT

பிரீமியர் பேட்மிண்டன் லீக் போட்டிகள் சென்னை, லக்னோவை தொடர்ந்து ஹைதராபாத்தில்

நடைபெற்று வருகிறது. ஜி.எம்.சி பாலயோகி உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்ற

டையில் ஹைதராபாத் ஹண்டன்ர்ஸ் - பெங்களூரு ரப்டர்ஸ் அணிகள் மோதின

ஹோம் கிரவுண்ட் ஆதரவுடன் களமிறங்கிய ஹைதராபாத் அணி, இன்றைய டையில் ஏமாற்றம் அளித்தது. முதலாவதாக நடந்த கலப்பு இரட்டையர் பிரிவு போட்டியில், லேன் - இவானோ இணை பெங்களூருவின் சன் - சபுத்ரா இணையை எதிர்கொண்டது. இந்த போட்டியில் 13-15, 15-9, 12-15 என்ற செட் கணக்கில் பெங்களூரு அணி போட்டியை வென்றது

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹைதராபாத்தின் சவுரப் வெர்மா, பி.வி.சிந்து

ஆகியோரும் ஏமாற்றம் அளித்தனர். ஆண்கள் இரட்டையர் பிரிவு போட்டியில்,

லெவெர்டெஸுக்கு எதிரான போட்டியில் 12-15, 15-10, 6-15 என்ற செட் கணக்கில் சவுரப்

வெர்மா போட்டியை இழந்தார்.

மூன்றாவதாக நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டியில், பேட்மிண்டன் உலக தரவரிசையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் தா சு யிங்கிடம் தோல்வியடைந்தார் சிந்து. 15-11, 13-15, 9-15 என்ற செட் கணக்கில் சிந்து போட்டியை இழந்தார்.

சிந்து

இதனால் மூன்று போட்டிகளின் முடிவில் 0-4 என்ற புள்ளிக்கணக்கில் பெங்களூரு அணி முன்னிலை பெற்றது. அடுத்து நடந்த கலப்பு இரட்டையர் பிரிவு போட்டியில் மட்டும் பெங்களூருவின் சன் - வன் இணை ஏமாற்றம் அளிக்க, 15-13, 15-11 என்ற செட் கணக்கில் இவனோவ் - என்.எஸ் ரெட்டி இணை போட்டியை வென்றது. ஏற்கனவே ஹைதராபாத்தின் டிரம்ப் கேமை இழந்துள்ளதால், -1 என இருந்த புள்ளி, இப்போது 0 ஆனது.

கடைசி போட்டியான லியூ - பி.எஸ் பிரணீத் மோதிய ஆண்கள் ஒற்றையர் பிரிவு

போட்டியில் 11-15, 6-15 என்ற செட் கணக்கில் பெங்களூருவின் பிரணீத் போட்டியை

வென்றார்.

இதனால் ஐந்து போட்டிகளின் முடிவில் 0-3 என்ற புள்ளிக்கணக்கில் பெங்களூரு அணி

டையை வென்றது. கடைசி மூன்று டைகளையும் இழந்த நடப்பு சாம்பியன் பெங்களூருவுக்கு

இந்த வெற்றி ஆறுதல் தந்துள்ளது.

பிப்ரவரி 1-ம் தேதி இரண்டு டைகள் நடைபெற உள்ளன. பூனே 7 ஏஸஸ் - நார்த் ஈஸ்டர்ன்

வாரியர்ஸ் அணிகள் முதல் டையிலும், அவாதி வாரியர்ஸ் - சென்னை சூப்பர்ஸ்டார்ஸ் இரண்டாவது

டையிலும் மோத உள்ளனர்.

Next Story
Share it