அண்மை செய்திகள்
சீனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் - காலிறுதியில் சவுரவ், ஜோஷ்னா சின்னப்பா

77வது சீனியர் தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்
போட்டிகள் சென்னையில் தொடங்கியுள்ளன. பிப்ரவரி 9-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை போட்டிகள் நடைபெற உள்ளன.
2011-ம் ஆண்டுக்கு பிறகு, சரியாக 9 ஆண்டுகளுக்கு பிறகு தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் சென்னையில் நடைபெறுகிறது.
ஸ்குவாஷ் விளையாடும் நாடுகளின் அந்தந்த ஊர்களிலேயே தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளை
நடத்தலாம் என சர்வதேச ஸ்குவாஷ் அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், 9 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் தேசிய
ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் நடைபெறுவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இன்று நடைபெற்ற போட்டிகளில், முன்னணி ஸ்குவாஷ் வீரரான சவுரவ் கோஷல் 11-4,
11-3, 11-8 என்ற கேம் கணக்கில் சந்தீப் ஜங்ராவை வீழ்த்தினார். மற்றுமொரு போட்டியில், நட்சத்திர வீராங்கனை
ஜோஷ்னா சின்னப்பா, 11-5, 11-3, 11-4 என்ற கேம் கணக்கில் மத்திய பிரதேச வீராங்கனை
ராதிகாவை வீழ்த்தினார். இந்த வெற்றி மூலம், சவுரவ், ஜோஷ்னா ஆகியோர் காலிறுதிக்கு
முன்னேறியுள்ளனர்.
இந்த சாம்பியன்ஷிப்பில் விளையாடும் வீரர்
வீராங்கனைகளில் சிறப்பானவர்களை ஆசிய குழு சாம்பியன்ஷிப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட
உள்ளனர். ஆசிய குழு ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப், கோலாலம்பூரில் வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ளது