அண்மை செய்திகள்
ஆஸ்திரேலியன் ஓபன்: கலப்பு இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் போபண்ணா வெற்றி!

ஆஸ்திரேலியன்
ஓபன் தொடர் டென்னிஸ் போட்டிகள்
தற்போது ஆஸ்திரேலியாவில்
நடைபெற்று வருகின்றன.
இதில்
கலப்பு இரட்டையர் போட்டிகள்
இன்று நடைபெற்றன.
இந்தியா
சார்பில் கலப்பு இரட்டையர்
பிரிவில் ரோகன் போபண்ணா இன்று
களமிறங்கினார்.
போபண்ணா-நாடியா
ஜோடி அமெரிக்காவின் அஸ்டின்
மற்றும் உக்ரைனின் லிட்மாலா
இணையை எதிர்கொண்டது.
இந்தப்
போட்டியின் முதல் செட்டை
போபண்ணா ஜோடி 7-5
எனக்
கைப்பற்றியது.
எனினும்
இரண்டாவது செட்டை போபண்ணா
ஜோடி 4-6
என்ற
கணக்கில் இழந்தது.
இதனால்
வெற்றியாளரை தீர்மானிக்க
மூன்றாவது செட்டாக டை பிரேக்கர்
முறை பயன்படுத்தப்பட்டது.
இதில்
போபண்ணா-நாடியா
ஜோடி 10-6
என்ற
ஸ்கோருடன் வெற்றிப் பெற்றது.
அத்துடன்
முதல் சுற்றுப் போட்டியை
7-5,4-6,10-6
என்ற
கணக்கில் வெற்றிப் பெற்றது.
இந்த
ஜோடி இரண்டாவது சுற்றில்
அமெரிக்காவின் நிக்கோல்
மிலிச்சர் மற்றும் பிரேசிலின்
புரூனோ சோரஸ் இணையை எதிர்கொள்ள
உள்ளது.
முன்னதாக
இந்தியாவின் நட்சத்திர
வீராங்கனை சானியா மிர்சா
காயம் காரணமாக ஆஸ்திரேலியன்
ஓபன் தொடரின் கலப்பு இரட்டையர்
பிரிவில் பங்கேற்கவில்லை
என அறிவித்திருந்தார்.
இதனால்
சானியா உடன் இணைந்து விளையாட
இருந்த போபண்ணா நாடியா கிச்சனோக்
உடன் இணைந்து விளையாட முடிவு
எடுத்தார்.
மேலும்
ஆஸ்திரேலிய ஓபன் தொடரில்
ஒற்றையர் பிரிவில் பிரஜ்னேஷ்,
இரட்டையர்
பிரிவில் போபண்ணா ஆகியோர்
தோல்வி அடைந்தனர்.
அதேபோல
மகளீர் இரட்டையர் போட்டியின்
முதல் சுற்றில் காயம் காரணமாக
சானியா மிர்சா வெளியேறினார்.
எனினும்
கலப்பு இரட்டையர் பிரிவில்
இந்தியாவின் அனுபவ வீரர்
லியாண்டர் பயஸ் வைல்ட் கார்ட்
முறை மூலம் தகுதி பெற்று
உள்ளார்.
லியாண்டர்
பயஸ் 2017ஆம்
ஆண்டு பிரான்ஸ் ஓபன் சாம்பியன்
ஜெலினா ஓஸ்டாபென்கோவுடன்
விளையாட உள்ளார்.
இவர்கள்
இருவரும் முதல் போட்டியில்
ஆஸ்திரேலியாவை சேர்ந்த சண்டரஸ்
மற்றும் போல்மன்ஸ் ஜோடியை
நாளை எதிர்கொள்ள உள்ளனர்.