TOKYO Olympics start in
:
Days
:
Hrs
:
Min
Sec
Begin typing your search above and press return to search.

அண்மை செய்திகள்

பிபிஎல் - ரித்துபர்னாவின் வெற்றியால் அரை இறுதி வாய்ப்பை தக்க வைத்த பூனே

பிபிஎல் - ரித்துபர்னாவின் வெற்றியால் அரை இறுதி வாய்ப்பை தக்க வைத்த பூனே
X
By

Karthiga Rajendran

Published: 4 Feb 2020 5:13 AM GMT

பிரீமியர் பேட்மிண்டன் லீக் தொடர் போட்டிகள் சென்னை, லக்னோவை அடுத்து

ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. ஜி.எம்.சி பாலயோகி உள்விளையாட்டு அரங்கில்

நேற்று நடந்த போட்டியில் அவாதி வாரியஸ் - பூனே 7 ஏஸஸ் அணிகள் மோதின.

முதலில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு போட்டியில் அவாதியின் ஹியூன் - சியோல்

இணை, பூனே 7 ஏஸஸின் சிராக் செட்டி - செட்டியாவான் இணையை எதிர்கொண்டது. தொடர்

வெற்றிகளை பெற்று வந்த பூனே அணியின் இந்த இரட்டையர் இணை நேற்றைய போட்டியில் தோற்றது.

6-15, 15-9, 15-12 என்ற செட் கணக்கில் அவாதி அணி வெற்றி பெற்று முன்னிலை வகித்தது.

பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டியில், 13-15, 12-15 என்ற புள்ளிகக்ணக்கில்

பூனேவின் ரித்துபர்னா தாஸ் வென்றார். மூன்றாவது போட்டியான கலப்பு இரட்டையர் பிரிவு

போட்டியில் பூனேவின் அட்காக் இணை - அவாதியின் பெடெர்சன் - சோசோனோவ் இணையை

எதிர்கொண்டது. 6-15, 9-15 என்ற செட் கணக்கில் பூனே அணி போட்டியை வென்றது. மூன்று

போட்டிகளின் முடிவில், 1-3 என்ற புள்ளிக்கணக்கில் பூனே முன்னிலை பெற்றது

கடைசியாக நடந்த இரண்டு ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டிகளில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றன. தே - லோஹ் மோதிய போட்டியில், 12-15, 14-15 என்ற செட் கணக்கில் பூனேவின் லோஹ் வெற்றி பெற்றார்.

பி.பி.எல் பூனே 7 ஏஸஸ்

கடைசி போட்டியில், அவாதியின் ஜெயராம் 6-15, 15-10, 15-13 என்ற செட் கணக்கில்

பூனேவின் சகாயை வென்றார். இதனால் ஐந்து போட்டிகளின் முடிவில் 1-4 என்ற

புள்ளிக்கணக்கில் பூனே அணி வென்றது

இதன் மூலம், அரை இறுதிக்கு வாய்ப்பை பூனே அணி தக்க வைத்துள்ளது. இன்னும் மூன்று நாட்களுக்கு லீக் போட்டிகள் நடக்க உள்ளது. இன்று நடக்க இருக்கும் இரண்டு போட்டிகளில், சென்னை சூப்பர்ஸ்டார்ஸ் - நார்த் ஈஸ்டர்ஸ் வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன. அடுத்த போட்டியில் பெங்களூரு ரப்டர்ஸ் - மும்பை ராக்கெட்ஸ் அணிகள் மோதுகின்றன. பிரீமியர் பேட்மிண்டன் லீக் இறுதிப்போட்டி வரும் பிப்ரவரி 9-ம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது.

Next Story
Share it