அண்மை செய்திகள்
உலகத்தின் பணக்கார கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் மூன்று இந்தியர்கள்
கிரிக்கெட் வீரர்களின் சொத்துமதிப்பை கணக்கிட்டதில், மூன்று இந்திய வீரர்கள் இடம்பெற்றனர்.
கிரிக்கெட் விளையாடி மட்டுமல்லாமல், இதர விதங்களில் கிரிக்கெட் வீரர்கள் சம்பாதித்து வருகின்றனர். பிசிசிஐ நிறுவனம் வீரர்களுக்கு அதிக சம்பளம் கொடுத்து வருகின்றனர். உலகத்திலுள்ள அனைத்து கிரிக்கெட் வீரர்களின் சொத்துமதிப்பைப் பார்க்கும் போது, பல ஆச்சரியமான தகவல்கள் கிடைத்தது.
5. பிரையன் லாரா
வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆட்டக்காரரான பிரையன் லாரா பணக்காரர்களின் வரிசையில் ஐந்தாம் இடத்தைப் பிடித்துள்ளார். இவருடைய சொத்து மதிப்பு 415 கோடி.
4. ரிக்கி பாண்டிங்க்
முன்னாள் ஆஸ்திரேலிய ஸ்கிப்பர் ஆன ரிக்கி பாண்டிங்க் 2012-ஆம் ஆண்டு விளையாடுவதிலிருந்து வெளியேறினா. லாராவைவிட 75 கோடி அதிகமாக வைத்திருக்கும் ரிக்கியின் மொத்த சொத்துமதிப்பு 500 கோடி ரூபாய்.
இனி வரும் மூவரும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்! முதல் இடத்தைப் பிடித்தவர் சற்று வியப்பில் நம்மை ஆழ்த்துவார்.
3. விராத் கோலி
இந்திய ஸ்கிப்பரான விராத் கோலி கிரிக்கெட் மட்டுமல்லாமல், பல விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். 638 கோடி சொத்துமதிப்பு இருக்கும் கோலி, தனக்கென ஃபாஷன் நிறுவனங்கள் – ராகன் மற்றும் ஒன்8 நடத்திவருகிறார். ஃபோர்ப்ஸ் நிறுவனத்தின் உலகில் அதிகப்படியாக சம்பளத்தை பெறும் கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் இடம்பெற்ற ஒரே இந்திய வீரர் இவரே!
2. தோனி
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவரான தோனி உலகத்தின் இரண்டாவது பணக்காரர் ஆகிறார். பல சாதனைகளை முறியடித்து இந்திய அணிக்கு தொடர்ந்து பெருமை சேர்த்துக்கொண்டு வருகிறார். முக்கியமாக, ஐசிசி கோப்பை, டி20 உலகக் கோப்பை, இரண்டு ஆசிய கிரிக்கெட் கோப்பைகள் மற்றும் 2011-ஆம் ஆண்டின் உலகக்கோப்பையையும் தட்டிசென்றார். இவருடைய சொத்துமதிப்பு 767 கோடி.
1. சச்சின் டெண்டுல்கர்
கிரிக்கெட்டை விட்டு பல வருடங்கள் விலகியிருந்தாலும், இவருடைய சொத்துமதிப்பு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கிரிக்கெட்டின் கடவுள் என்று நம்மில் பலராலும் அழைக்கப்படும் இவர், 1090 கோடி மதிப்புள்ள சொத்துக்களைப் பெற்றுள்ளார்.