அண்மை செய்திகள்
இந்திய ஹாக்கியின் முடிசூடா 'ராணி': கேப்டன் ராணி ராம்பாலுக்கு கிடைக்குமா 'வேர்ல்ட் கேம்ஸ் அத்லட் ஆஃப் தி இயர்' விருது?

இந்திய
மகளீர் ஹாக்கி அணியின் கேப்டன்
ராணி ராம்பால் 'வேர்ல்ட்
கேம்ஸ் அத்லட் ஆஃப் தி இயர்
2019'
என்ற
விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
இந்த
விருதிற்கு ராணி ராம்பாலை
பரிந்துரைத்தது சர்வதேச
ஹாக்கி கூட்டமைப்பு.
இந்த
விருதிற்கு இந்தியாவிலிருந்து
பரிந்துரைக்கப்படும் முதல்
விளையாட்டு வீராங்கனை ராணி
தான்.
இந்த
விருதிற்கு 25
பேர்
பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
இதில்
பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கு
மக்கள் அளிக்கும் வாக்குகளின்
அடிப்படையில் விருதுகள்
வழங்கப்பட்டும்.
இப்படி ஒரு சர்வதேச கூட்டமைப்பே ராணி ராம்பாலின் பெயரை விருதிற்கு பரிந்துரைக்க என்ன காரணம்? அப்படி ராணி ராம்பால் என்ன செய்து விட்டார்?
ஹரியானா
மாநிலம் குருஷேத்திரத்தில்,
ஷாபாத்
என்று ஒரு சிறிய கிராமத்தில்
பிறந்தவர் ராணி ராம்பால்.
அந்த
கிராமத்தில் வண்டி இழுத்து
வரும் ராம்பால் என்பவருக்கு
ராணி மகளாக பிறந்தார்.
மிகவும்
ஏழ்மையான
குடும்பத்தில் பிறந்தவர்
ராணி ராம்பால்.
இவரது
குடும்பம் தங்கியிக்க சரியான
வீடு கூட இல்லாமல் இருந்தனர்.
அவர்கள்
அப்போது தங்கி இருந்த வீடு
மழைக் காலங்களில் ஒழுகும்.

இந்தச்
சூழலில் தனது 6ஆவது
வயதில் பள்ளியில் சிலர் ஹாக்கி
விளையாடுவதை பார்த்தவுடன்
ராணி ராம்பாலுக்கு ஹாக்கியின்
மீது ஆசை வந்துள்ளது.
ராணி
ராம்பாலின் வீட்டில் யாரும்
விளையாட்டுப் போட்டிகளில்
பங்கேற்றது இல்லை.
எனவே
அவர்களுக்கு திடீரென ராணி
ஹாக்கி விளையாட்டு மீது ஆர்வம்
காட்டியதை பெரிதாக கண்டு
கொள்ளவில்லை.
எனினும்
ராணி நீண்ட நாட்கள் பிடிவாதமாக
இருந்ததால் அவருடைய தந்தை
அவரை ஷாபாத் ஹாக்கி அகாடமியில்
சேர்க்க சென்றார்.
அப்போது
அங்கு இருந்த ஹாக்கி பயிற்சியாளர்
சர்தார் பல்தேவ் ராணியின்
குடும்பநிலையை அறிந்து அவரால்
பயிற்சிக்கு சரியாக வர முடியாது
என்பதால் முதலில் சேர்த்து
கொள்ளவில்லை.
எனினும்
ராணியின் விளையாட்டு திறனை
பார்த்தவுடன் பயிற்சியாளர்
பல்தேவ் அவரை பயிற்சிக்கு
சேர்த்துள்ளார்.

வழக்கம்
போல ஒரு குடும்பத்தில் பெண்
விளையாட்டில் களமிறங்கினால்
உறவினர்கள் அதனை எவ்வாறு
தடுக்க வருவார்களோ அதேபோல
ராணி ராம்பாலின் உறவினர்களும்
வந்துள்ளனர்.
அவை
எதையும் பொருட்படுத்தாமல்
ராணி ராம்பால் ஹாக்கி விளையாட
ஆரம்பித்தார்.
ராணி
தினமும் பயிற்சிக்கு சரியாக
செல்ல வேண்டும் என்பதற்காக
அவருடைய தாய் தினமும் இரவில்
விழித்து கொண்டிருப்பார்.
ஏனென்றால்
அவர்கள் வீட்டில் கடிகாரம்
வாங்கக் கூட அப்போது பணம்
வசதி இல்லை.
இதனை
அறிந்த ராணி,
பள்ளியில்
ஒரு கையெழுத்து போட்டியில்
முதல் பரிசு கடிகாரம் என்பதை
தெரிந்தவுடன் அதில் பங்கேற்றார்.
தன்னுடைய
கையெழுத்து அழகாக இல்லாவிட்டாலும்
அதனை மேம்படுத்த தீவிர பயிற்சி
எடுத்து முதல் பரிசான கடிகாரத்தை
பெற்றார்.
அதனை
தன்னுடைய தாய்க்கு பரிசு
அளித்தார்.

தனது
ஆறு
வயதில் ஹாக்கி ஆடத் தொடங்கிய
ராணியின் வாழ்க்கையில் 2007ஆம்
ஆண்டு ஒரு பெரிய காயம் ஏற்பட்டது.
அப்போது
மருத்துவர்கள் அவரை ஹாக்கி
விளையாடாமல் ஓய்வு எடுக்குமாறு
அறிவுறுத்தியுள்ளனர்.
இதனால்
அவருடைய ஹாக்கி பயணம் முடிந்து
விடுமோ என்ற கவலை எழுந்துள்ளது.
எனினும்
தன்னுடைய
வீடா முயற்சி மற்றும் கடின
உழைப்பால் 2009
ஆம்
ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற
யூத் சாம்பியன்ஷிப் தொடரில்
ராணி ராம்பால் களமிறங்கினார்.
அதில்
சிறப்பாக விளையாடி தொடர்
நாயகி விருதை பெற்றார்.
அதன்பின்னர்
தன்னுடைய 15
வயதில்
2010ஆம்
ஆண்டு
உலகக்கோப்பைத் தொடரில் இந்திய
அணிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேலும்,
அந்தத்
தொடரில் 7
கோல்களை
அடித்து சிறந்த இளம் வீராங்கனைப்
பட்டத்தை வென்றார்.
அப்போது
முதல் இந்திய மகளீர் ஹாக்கி
அணியில் ராணி ராம்பால் தவிர்க்க
முடியாத ஒரு வீராங்கனையான
வலம் வருகிறார்.

இதன்பின்னர்
2015ஆம்
ஆண்டு ஹாக்கி உலக லீக் தொடரில்
இந்திய அணி பங்கேற்றது.
அந்தத்
தொடரில் முதல் ஐந்து இடத்தில்
வந்தால் இந்திய அணிக்கு
ஒலிம்பிக் தகுதி பெறும்
வாய்ப்பு கிடைக்கும் என்று
கணிக்கப்பட்டது.
அதன்படி
ஐந்தாவது மற்றும் ஆறாவது
இடத்திற்கான போட்டியில்
இந்தியா-ஜப்பான்
அணிகள் மோதின.
அதில்
சிறப்பாக விளையாடிய ராணி
ராம்பால் ஆட்டத்தின் ஒரே
கோலை அடித்து இந்திய அணிக்கு
ஒலிம்பிக் வாய்ப்பை பிரகாச
படுத்தினார்.
அதன்பின்னர்
ஐரோப்பிய சாம்பியன்ஷிப்
தொடரில் இறுதி போட்டிக்கு
முன்னேறிய இரண்டு அணிகளும்
ஏற்கெனவே ஒலிம்பிக் போட்டிக்கு
தகுதி பெற்று விட்டதால்,
உலக
லீக் தொடரில் ஐந்தாவது இடத்தை
பிடித்த இந்திய அணிக்கு
ஒலிம்பிக் தகுதி அளிக்கப்பட்டது.
இதனால்
36ஆண்டுகளுக்குப்
பிறகு இந்திய மகளீர் ஹாக்கி
அணி மீண்டும் ஒலிம்பிக்கில்
களமிறங்கியது.
அதேபோல
தற்போது மீண்டும் கடந்த ஆண்டு
நடைபெற்ற 2020
ஒலிம்பிக்
தகுதி போட்டியில் ராணி ராம்பால்
அடித்த ஒரு கோல் இந்திய அணிக்கு
மீண்டும் ஒலிம்பிக் வாய்ப்பை
பெற்று தந்துள்ளது.
மேலும்கடந்த
ஆண்டு நடைபெற்ற எஃப்.ஐ.ஹேச்
சீரிஸ் இறுதி போட்டியில்
இந்திய அணி ஜாப்பான் அணியை
வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை
வென்றது.
அந்தத்
தொடரில்
சிறந்த வீராங்கனைக்கான
விருதையும் ராணி ராம்பால்
தன்வசமாக்கினார்.
தனது
25
வயதிற்குள்
இந்திய அணிக்காக 200
போட்டிகளுக்கு
மேலாக விளையாடியுள்ளார்.
அத்துடன்
130
கோல்களுக்கு
மேல் அடித்துள்ளார்.
இப்படி
10
ஆண்டு
காலம் ஒருவர் இந்திய மகளீர்
ஹாக்கியே தாங்கி நிற்பது
சாதாரண விஷயமல்ல.
இத்தகைய வீராங்கனை அந்த உலக விருதை பெற மிகவும் தகுதியானவர். நாம் அனைவரும் ராணி ராம்பாலுக்கு வாக்களித்து அவர் இந்த விருதை பெற நம்மால் முடிந்த உதவியை செய்வோம். இந்த விருதிற்கு வாக்களிக்க கடைசி நாள் வரும் 30ஆம் தேதி. அதற்குள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.