TOKYO Olympics start in
:
Days
:
Hrs
:
Min
Sec
Begin typing your search above and press return to search.

அண்மை செய்திகள்

துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: முதல் சுற்றில் தோல்வி... பிரஜ்னேஷ் ஏமாற்றம்

துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: முதல் சுற்றில் தோல்வி... பிரஜ்னேஷ் ஏமாற்றம்
X
By

Karthiga Rajendran

Published: 25 Feb 2020 6:17 PM GMT

துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கியது, இரண்டாவது நாளான இன்று, இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் போட்டியிட்டார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில், ஆஸ்திரியாவின் டென்னிஸ் நோவக் - பிரஜ்னேஷ் மோதினர். இந்த போட்டியில் 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் பிரஜ்னேஷ் தோல்வியடைந்தார். இதனால், துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இருந்து வெளியேறினார்.

வைல்டு - கார்டு வாய்ப்பு மூலமாக இந்த போட்டியில் பங்கேற்க தேர்ச்சி பெற்றிருந்த பிரஜ்னேஷ், முதல் சுற்றிலேயே வெளியேறியுள்ளது இந்திய டென்னிஸ் ரசிகர்களிடையே ஏமாற்றத்தை அளித்துள்ளது

பயஸ்-எப்டன் ஜோடி

இதே தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவு போட்டியில், இந்தியாவின் லியாண்டர் பயஸ் போட்டியிட்டார். இவான் டோடிக் மற்றும் ஃபிலிப் போலசெக் - மேத்யூ எப்டனுடன் மற்றும் பயஸ் ஜோடி மோதியது. ஆட்டத்தின் முடிவில் 6-4, 6-3 என்ற புள்ளி கணக்கில் எளிதாக போட்டியை வென்ற எப்டன் - பயஸ் இணை காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

Next Story
Share it