அண்மை செய்திகள்
5ஆவது பிரிமியர் பேட்மிண்டன் லீக் தொடர்: ஜன.20ல் சென்னையில் தொடக்கம்

ஐந்தாவது பேட்மிண்டன் பிரிமியர் லீக் தொடர் வரும் ஜனவரி 20ஆம் தேதி தொடங்கி 21 நாட்கள் நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் 7 அணிகள் களமிறங்க உள்ளன. இந்தப் போட்டிகள் அனைத்தும் சென்னை, ஹைதராபாத் மற்றும் லக்னோ உள்ளிட்ட இடங்களில் நடைபெற உள்ளன.
இந்தத்
தொடருக்கான கோப்பை அறிமுகப்படுத்தும்
விழா இன்று சென்னையில்
நடைபெற்றது.
இதில்
இந்திய பேட்மிண்டன் வீரர்களான
சாய் பிரணீத்,
லக்ஷயா
சென்,
சத்விக்சாய்ராஜ்
ரன்கிரெட்டி உள்ளிட்ட வீரர்கள்
பங்கேற்றனர்.
அத்துடன்
இந்த ஆண்டு லீக் தொடரில்
பங்கேற்கும் 15வயது
வீரர் சங்கர் முத்துசாமியும்
விழாவில் கலந்து கொண்டார்.
மேலும்
ஒலிம்பிக்கில் வெள்ளிப்
பதக்கம் வென்ற கிறிஸ்டினா
பீடர்சென் மற்றும் டனோன்சக்
ஆகியோரும் இவ்விழாவில் கலந்து
கொண்டனர்.
இந்த
விழாவில் பேசிய இந்திய மற்றும்
நடப்புச் சாம்பியன் பெங்களூரு
ராப்டர்ஸ் வீரர் சாய்
பிரணீத்,“இந்தியாவில்
பேட்மிண்டன் விளையாட்டை
பிரபலமாக்க பிரிமியர் லீக்
மிகவும் உதவியுள்ளது.
மேலும்
இந்த லீக் பேட்மிண்டனின்
தரத்தையும் உயர்த்தியுள்ளது.
அதேபோல
இந்த ஆண்டும் சிறப்பான
பேட்மிண்டன் ஆட்டத்தை தொடருவோம்
என நம்புகிறோம்.
அத்துடன்
இந்தத் தொடர் ரசிகர்கள்
ரசிக்கும் வகையில் இருக்கும்
என எதிர்பார்க்கிறேன்” எனத்
தெரிவித்தார்.
இதனைத்
தொடர்ந்து ஒலிம்பிக் போட்டியில்
வெள்ளிப்பதக்கம் வென்ற
கிறிஸ்டினா பீடர்சென்,
“இந்தியா
எங்களுக்கு எப்போதுமே இரண்டாவது
தாய்நாடு.
இந்த
லீக் தொடர் உலகில் நடைபெறும்
கடினமான தொடர்களில் ஒன்று.
ஆகவே
இந்தத் தொடரில் சிறப்பான
ஆட்டங்கள் விளையாட நான்
எதிர்பார்த்து காத்திருக்கிறேன்”
எனக் கூறினார்.
இந்திய
வீரர் சத்விக் சாய்ராஜ்
ரன்கிரெடி,
“இந்தத்
தொடர் 2020
டோக்கியோ
ஒலிம்பிக் போட்டிகளுக்கு
ஒரு முக்கிய பயிற்சியாக
அமையும்”
எனத் தெரிவித்துள்ளார்.
பிரிமியர்
லீக் தொடர் இந்தியாவில்
மட்டுமல்லாது உலகிலேயே மிகவும்
பிரபலம் அடைந்துள்ளதாக பிபிஎல்
டைட்டில் ஸ்பான்சர் ஸ்போர்ட்ஸ்
லைவ் செயல் இயக்குநர்
தெரிவித்தார்.
இந்த
ஆண்டு நடைபெறும் பிரிமியர்
லீக் தொடரில் இந்திய வீராங்கனை
சாய்னா நெய்வால் மற்றும்
வீரர் ஶ்ரீகாந்த பங்கேற்கவில்லை.
அவர்கள்
இருவரும் ஒலிம்பிக் போட்டிக்கு
தகுதி பெறும் முனைப்பில்
உள்ளதால் இந்த முறை பிரிமியர்
லீக் தொடரில் விளையாடவில்லை.
அவாதே
வாரியர்ஸ்,
பெங்களூரு
ராப்டர்ஸ்,
மும்பை
ராக்கேட்ஸ்,
ஹைதராபாத்
ஹன்டர்ஸ்,
சென்னை
சூப்பர் ஸ்டார்ஸ்,
வடகிழக்கு
வாரியர்ஸ் மற்றும் பூனே 7
ஏசஸ்
ஆகிய 7
அணிகள்
பங்கேற்கின்றன.
இந்தத்
தொடரை வெல்லும் அணிக்கு 6
கோடி
ரூபாய் பரிசுத் தொகையாக
அறிவிக்கப்பட்டுள்ளது.