அண்மை செய்திகள்
நடப்பு சாம்பியனுக்கு பயம்காட்டிய நார்த் ஈஸ்டர்ன் வாரியர்ஸ் - பி.பி.எல் அப்டேட்
பிரீமியர் பேட்மிண்டன் லீக் இராண்டாம் நாள் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றன. 4-3 என்ற கணக்கில் நடப்பு சாம்பியன் பெங்களூரு ராப்டர்ஸுக்கு பயம்காட்டியது நார்த் ஈஸ்டர்ன் வாரியர்ஸ் - பி.பி.எல் அப்டேட்
3-3 என முதல் நான்கு போட்டிகளுக்கு பிறகும் இரு அணிகள் சமநிலையில் இருந்த போது,
தாய்லாந்து வீரர் சென்சொம்பூன்ஸ்க் 15-7, 15-8 என்ற புள்ளிக்கணக்கில் ஃபிரான்ஸ்
நாட்டைச் சேர்ந்த ப்ரைஸ் லெவெர்டெஸை தோற்கடித்தார். இதன் மூலம் நார்த் ஈஸ்டர்ன்
அணி முன்னிலை பெற்றது.
உலக பேட்மிண்டன் தரவரிசையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் தா ட்சு யிங் பெங்களூரு ராப்டர்ஸ் அணியின் முக்கிய வீராங்கனை. அவர் விளையாடிய போட்டியில் 15-7, 15-5 என்ற புள்ளிக்கணக்கில் அஷ்மிதா சஹிலாவை தோற்கடித்து ஆறுதல் தந்தார். மிக எளிதாக போட்டியை வென்ற தா ட்சு யிங், மற்றுமொரு முறை அணியின் முக்கிய வீராங்கனை என்பதை நிரூபித்துள்ளார்.
இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் தொடரில் அரை இறுதி வரை முன்னேறிய லீ சியூக் யூ, நார்த்
ஈஸ்டர்ன் அணியில் இடம் பிடித்திருந்தார். பேட்மிண்டன் உலக தரவரிசையில் 18-வது
இடத்தில் இருக்கும் அவர், இந்தியாவின் சாய் பிரணீத்தை வீழ்த்தினார். கடைசி வரை
போராடிய பிரணீத் 15-14, 15-9 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியைத் தழுவினார்.
கலப்பு இரட்டையர் பிரிவில், சன் பெங் சூன் - இயாம் ஹீ
வன் உடன் லீ யாங் டே - கிம் ஹா நா மோதினர். இந்த போட்டியில் 8-15, 11-15 என்ற புள்ளிக்கணக்கில்
நார்த் ஈஸ்டர்ன் அணியைச் சேர்ந்த லீ யாங் டே - கிம் ஹா நா ஜோடி போட்டியை வென்றனர்
சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில், நாளை
நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர்ஸ்டார்ஸ் - மும்பை ராக்கெட்ஸ் அணிகள்
மோதுகின்றன. நேற்று நடைபெற்ற போட்டியில், ஹைதராபாத் ஹண்டர்ஸ் அணியை சென்னை
சூப்பர்ஸ்டார்ஸ் வென்றது குறிப்பிடத்தக்கது. ஜனவரி 24-ம் தேதி வரை பிரீமியர்
பேட்மிண்டன் லீக் போட்டிகள் சென்னையில் நடைபெற உள்ளன.